2012 - ம் வருட ராசிபலன்


கண்ணியமான தோற்றத்தையும், கனிவான குணமும் கொண்ட தனுசு ராசி நேயர்களே! ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு உடைய தனுசு ராசி நேயர்கள் பிறரின் துன்பம் கண்டு இரங்கும் குணம் உடையவர்கள். பெருந்தன்மைக்கு இலக்கணமாக விளங்கும் இவர்கள் அமைதியான முறையில் செயல்படுவதோடு ஆழமாகவும் சிந்திக்கும் திறன் உடையவர்களாக விளங்குவார்கள். குருவை தன் ராசி நாதனாகக் கொண்ட இவர்கள் சிறந்த எழுத்தாளர்களாகவும் ஆசிரியர்களாகவும் பிரகாசிப்பார்கள். சிறந்த கற்பனை வளம் உடைய தனுசு ராசி நேயர்கள் சரியான நேரத்தில் தன்னுடைய எண்ணங்களை வெளிப்படுத்தினால் அவர்களின் கருத்துக்கு உரிய அங்கீகாரமும் திறமைக்கு உரிய பாராட்டும் வந்து சேரும். மூலம் நட்சத்திரக்காரர்களுக்கு வேதை(ஆகாதது) ஆயில்யம் நட்சத்திரம். திருமணம் செய்ய தொழில் கூட்டு சேர்க்கவும் பொருந்தாத நட்சத்திரங்கள் 6 அவைகள் - அசுவினி, ஆயில்யம், மகம், கேட்டை, மூலம், ரேவதி. அதிர்ஷ்டமலர் - செவ்வல்லி. அனுகூல தெய்வம் - இந்திரன். அதிர்ஷ்டக்கல் - வைடூரியம். அதிர்ஷ்ட நிறம் - கரும்பச்சை. அதிர்ஷ்ட எண் - 1, 10, 19. பூராடம் நட்சத்திரக்காரர்களுக்கு வேதை(ஆகாதது) பூசம் நட்சத்திரம். திருமணம் செய்ய தொழில் கூட்டு சேர்க்கவும் பொருந்தாத நட்சத்திரங்கள் 6 அவைகள் - பரணி, பூரம், அனுஷம், பூராடம், உத்திரட்டாதி. அதிர்ஷ்ட மலர் - வெண்தாமரை. அனுகூல தெய்வம் - லஷ்மி. அதிர்ஷ்ட கல் - வைரம். அதிர்ஷ்ட நிறம் - வெளிர் நீலம். அதிர்ஷ்ட எண்கள் - 2, 11, 20. உத்திராடம் நட்சத்திரக்காரர்களுக்கு வேதை(ஆகாதது) புனர்பூசம் நட்சத்திரம். திருமணம் செய்ய தொழில் கூட்டு சேர்க்கவும் பொருந்தாத நட்சத்திரங்கள் 6 அவைகள் - கார்த்திகை, புனர்பூசம், உத்திரம், விசாகம், உத்திராடம், பூரட்டாதி. அதிர்ஷ்ட மலர் - தாமரை. அனுகூலத் தெய்வம் - சிவன். அதிர்ஷ்டக் கல் - மாணிக்கம். அதிர்ஷ்ட நிறம் - பச்சை. அதிர்ஷ்ட எண்கள் - 3, 12, 21. தனுசு உரிய ஆதிக்கக் கிரகம் - குரு. அதிர்ஷ்ட மலர் - முல்லை. அதிர்ஷ்டக் கல் - மாணிக்கம். அதிர்ஷ்ட நிறம் - மஞ்சள். அதிர்ஷ்ட திசை - வடகிழக். அதிர்ஷ்ட எண் - 3. நீங்கள் வணங்க வேண்டிய தெய்வம் - பிரம்மா. பொதுப்பலன்: 2012 புத்தாண்டு உங்கள் ராசிக்கு என்ன நற்பலன்களை வாரி வழங்குகிறது என்று பார்ப்போம்.

ஜனவரி
இம்மாதம் உங்களுக்கு ஏற்றமான யோகமான காலமாக இருக்கும். முதலாவதாக, உங்கள் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும். நோய் நொடிகள் வந்தால் உடனே குணமாகும். எப்போதும் உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். உங்களுடைய நடையில் ஒரு துள்ளல் இருக்கும். உங்கள் பேச்சிலும் வேகம் இருக்கும். செயலிலும் வேகம் இருக்கும். பெரியோர்களின் அன்பும், ஆதரவும், தங்களுக்கு கிடைக்க இருக்கின்றது. பரிகாரம்: சூரிய வழிபாடு செய்யுங்கள்.
பிப்ரவரி
இம்மாதத்தில் உங்களுடைய உழைப்பு எதுவுமே வீண் போகாது. உங்களுடைய உழைப்பு அனைத்தும் நல்ல பலன் கொடுக்கும். நிறைய ஆதாயங்களைத் தேடிக் கொடுக்கும். பொன், பொருள்கள் வாங்கவும் வீட்டுக்குத் தேவையான பொருட்கள், வசதிகளைப் பெருக்கும் கருவிகள், மின் சாதனங்கள் போன்றவற்றை வாங்கவும் பணவசதி அதிகமாகும். சொந்தமாக வீடு, மனை, தோட்டம், துரவு என்று வாங்குவீர்கள். சொந்தமாக வீடு கட்ட வேண்டும் என்ற ஆசை இருந்தால் அது இப்போது நிறைவேறும். பரிகாரம்: மஹாலட்சுமி வழிபாடு நல்லது.
மார்ச்
இம்மாதத்தில் உங்களது முயற்சிக்கு சிறுசிறு சோதனைகள் ஏற்படும். குடும்பத்தில் நிலவி வந்த வாட்டம். பிணி, பீடைகள், கருத்து வேறுபாடுகள் போன்றவை நீங்கும். எப்போதும் உற்சாகமும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். பிள்ளைகளுக்கும் நல்ல அபிவிருத்தி ஏற்படும். மதிப்பும் மரியாதையும் தரமும் வசதியும் உயரும். மங்கியும் பின்னடைந்தும் இருந்த நிலை மாறும். வெற்றி வாய்ப்புகள் உண்டாகும். பரிகாரம்: லட்சுமி நரசிம்மர் வழிபாடு நல்லது.
ஏப்ரல்
இம்மாதம் எந்தக் காரியத்தை எடுத்துக் கொண்டாலும் அதை உடனே வெற்றிகரமாக செய்து முடித்து விடலாம் என்று தோன்றும். அவநம்பிக்கை என்ற பேச்சிற்கே இடமில்லை. எப்போதும் நம்பிக்கையும் தைரியமும் நிறைந்திருக்கும். உங்களுடைய உற்சாகமான பேச்சு பல நல்ல நண்பர்களைத் தேடிக் கொடுக்கும். முக்கியமாக தொழில், வேலைவாய்ப்புகளில் ஈடுபாடுகள் அதிகரிக்கும். பரிகாரம்: முருகன் வழிபாடு நல்லது.
மே
இம்மாதத்தில் உங்களிடம் கானப்பட்டு வந்த மந்தத் தன்மை, மறதி, தயக்கம், மயக்கம், தடுமாற்றம் போன்றவை நீங்கும். உங்கள் மனதை நீங்கள் செய்யும் காரியங்களில் நிலை நிறுத்தி அந்தக் காரியங்களை வெற்றிகரமாகச் செய்து முடிக்க முடியும். எப்போதும் சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். எதையாவது செய்து கொண்டே இருப்பீர்கள். நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும். உங்களுடைய திட்டங்கள் நிறைவேறி நிறைய ஆதாயங்கள் கிட்டும். பரிகாரம்: அம்மன் வழிபாடு செய்யவும்.
ஜூன்
இம்மாதத்தில் உங்களுடைய உழைப்பு முழுமையும் உங்களுக்கு பெரும் இலாபத்தை தேடிக் கொடுக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு இப்போது நல்ல வேலை கிடைக்கும். புதிதாக தொழில் அல்லது வியாபாரம் தொடங்க நினைப்பவர்களுக்கு இப்போது அதற்கான வாய்ப்பு உருவாகும். வம்புச் சண்டைகள் வந்தால் விட மாட்டீர்கள். கடைசி வரை ஒரு கை பார்த்து விடுவீர்கள். கடமைகளையும், பொறுப்புகளையும் குறைவில்லாமல் நிறைவேற்றிக் கொள்வீர்கள். தேவையற்ற வாக்குறுதிகளை தவிர்க்கவும். பரிகாரம்: கணபதி வழிபாடு நல்லது.
ஜூலை
இம்மாதம் தொழில், வியாபாரத்தில் நிலவி வந்த மந்தமான போக்கு நீங்கும். கூட்டு வியாபாரத்தில் நிலவி வந்த கருத்து வேறுபாடு நீங்கும். உத்தியோகம் பார்ப்பவர்களின் கடின உழைப்பையும் நேர்மையையும் மேலதிகாரிகள் பெரிதும் பாராட்டுவார்கள். குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே நெருக்கமான உறவு காணப்படும். பிள்ளைகளால் மேன்மை உண்டாகும். தாய்வழி உறவினர்களிடமிருந்து நல்ல ஆதரவு கிடைக்கும். பரிகாரம்: சதுர்த்தி விரதம் இருந்து கணபதியை வழிபடுங்கள்.
ஆகஸ்ட்
இம்மாதத்தில் வருமானம் தொடர்பான அனைத்துச் செயல்களிலும், தேக்கம், தடை, தாமதம், தடங்கல் போன்றவை ஏற்படும். கைக்கு பணம் வருவது குறைவாகவும் உங்களுக்கு ஏற்படும் செலவுகள் அதிகமாகவும் இருக்கும். சில விரயங்களும் ஏற்படும். இம்மாதத்தைப் பொறுத்த வரை நல்லதும் கெட்டதும் கலந்த பலனாக இருக்கும். சில சோதனைகள் வந்தாலும் சில சந்தோஷ செய்திகளும் வரும். பரிகாரம்: தினமும் விநாயகரை வழிபடவும்.
செப்டம்பர்
இம்மாதத்தில் நீங்கள் முயற்சிகளைத் தீவிரப்படுத்தி முன்னேற்றகரமாகச் செயல்பட்டு அபிவிருத்தி காண்பீர்கள். பொறுப்புகள் நிறைவேறும். இம்மாதத்தைப் பொறுத்த வரை தந்தை வழி ஆதாயம் தங்களுக்கு மிகப் பெரிய வரப்பிரசாதமாக அமையும். கடமைகளை நிறைவேற்றுவதிலும் தனிக் கவனம் செலுத்துவீர்கள். எந்தக் காரியத்தை எடுத்துக்கொண்டாலும் அதைச் செய்து முடிக்கும் வரை ஓய மாட்டீர்கள். பரிகாரம்: அம்மன் வழிபாடு நன்மை தரும்.
அக்டோபர்
இம்மாதம் தொழில், வியாபாரத்தில் திடீரென்று சிக்கல்களும் நெருக்கடிகளும் தோன்றி நீங்கும். உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு மறைமுக எதிர்ப்பு ஏற்பட்டு அடங்கும். கலைஞர்கள் எதிர்பாராத செலவுகளைச் சந்திக்க நேர்ந்தாலும் அவற்றை சமாளித்து விடுவார்கள். குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகளின் நடவடிக்கைகளில் எப்போதும் கவனம் இருக்க வேண்டியது அவசியம். பரிகாரம்: சிவன் சன்னதியில் தீபம் ஏற்றி வழிபடவும்.
நவம்பர்
இம்மாதத்தில் உங்களுடைய பொருளாதார நிலையைப் பொறுத்த வரை பற்றாக்குறை என்ற பேச்சுக்கே இடமிருக்காது. பலவழிகளிலிருந்தும் பணம் கைக்கு வந்து கொண்டே இருக்கும். வருமானத்தை பெருக்கிக் கொள்ளவும் பல நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். கொடுக்கல், வாங்கலில் நிலவி வந்த குளறுபடிகளை ஒழுங்குப்படுத்திக் கொள்வீர்கள். தொழில் வியாபாரத்தை விரிவு படுத்திக்கொள்ள இது சரியான நேரம். அதிகமாக முதலீடும் செய்து கொள்ளலாம். உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு வேலைப்பளு குறையும். கலைஞர்களுக்குப் புதிய ஒப்பந்தங்கள் வந்து குவியும். குடும்பத்தில் உற்சாகமும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். நின்று போன திருமணப் பேச்சு வார்த்தைகள் மீண்டும் தொடங்கும். நல்ல முடிவும் ஏற்படும். உடல் நலனில் சற்று கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. பரிகாரம்: துர்க்கை வழிபாடு நல்லது.
டிசம்பர்
இம்மாதத்தில் தொழில், வியாபாரம் உற்சாகமாக நடைபெறும். உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். மாணவ, மாணவிகள் விளையாட்டுப் போட்டிகளிலும் கலந்து கொண்டு பரிசு பெறுவார்கள். தேர்வுகளிலும் நல்ல மதிப்பெண் வாங்குவார்கள். குடும்பத்தில் பல வகையான செலவுகள் ஏற்படும். ஆடம்பரமும் சற்றுத் தலை காட்டும். கருத்து வேற்றுமை காரணமாகத் தள்ளி நின்ற உறவினர்கள் இப்போது நெருங்கி வருவார்கள்.

0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India