2012 - ம் வருட ராசிபலன்


கடும் உழைப்பை தன் மூலதனமாகக் கொண்டு செயல்படும் விருச்சிகராசி நேயர்களே! விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் பேச்சைக் காட்டிலும் செயலில் தன் திறமையைக் காட்டி வெற்றியை ஈட்டும் குணம் உடையவர்கள். குழுவாக வேலை செய்தாலும் மற்றவர்களுடன் கலந்து பழகுவதில் ஒருவரை முறை வைத்துக் கொண்டு பழகுவதுடன் தன் கருத்துக்களை உடடினயாக வெளிப்படுத்தவும் சற்று தயங்குவார்கள். ஒரு வேலையில் இறங்கி விட்டால் அதை முடிக்கும் வரை எந்தப் பிரச்சினை இருந்தாலும் அதனை எதிர்கொள்ளும் திறமை உடையவர்கள். சற்று பிடிவாத குணம் உடையவர்களாக இருப்பார்கள். சற்றே பிடிவாதத்தை தளர்த்திக் கொண்டு இணக்கமாக வேலை செய்தால் இந்த ராசியில் பிறந்தவர்கள் வாழ்வில் உயர்ந்த நிலையை அடைய முடியும். விசாகம் நட்சத்திரக்காரர்களுக்கு வேதை(ஆகாதது) கார்த்திகை நட்சத்திரம். திருமணம் செய்ய தொழில் கூட்டு சேர்க்கவும் பொருந்தாத நட்சத்திரங்கள் பரணி, கார்த்திகை, விசாகம். அதிர்ஷ்ட மலர் - முல்லை. அனுகூல தெய்வம் - பிரம்மா. அதிர்ஷ்டக் கல் - கனக புஷ்பராகம். அதிர்ஷ்ட நிறம் - மஞ்சள். அதிர்ஷ்ட எண்கள் - 7, 16. அனுஷம் நட்சத்திரக்காரர்களுக்கு வேதை(ஆகாதது) பரணி நட்சத்திரம். திருமணம் செய்ய தொழில் கூட்டு சேர்க்கவும் பொருந்தாத நட்சத்திரங்கள் 6. அவைகள் பூசம், பரணி, பூரம், அனுஷம், பூராடம், உத்திரட்டாதி. அதிர்ஷ்ட மலர் - கருங்குவளை. அனுகூல தெய்வம் - எமன். அதிர்ஷ்டக் கல் - நீலம். அதிர்ஷ்ட நிறம் - கறுப்பு. அதிர்ஷ்ட எண் - 8, 17. கேட்டை நட்சத்திரக்காரர்களுக்கு வேதை(ஆகாதது) அசுவினி நட்சத்திரம். திருமணம் செய்ய தொழில் கூட்டு சேர்க்கவும் பொருந்தா நட்சத்திரங்கள் 6 அவைகள் - பரணி, ஆயில்யம், மகம், மூலம், கேட்டை, ரேவதி. அதிர்ஷ்ட மலர் - வெண்காந்தள். அனுகூலத் தெய்வம் - காளி மாதா. அதிர்ஷ்டக் கல் - மரகதம். அதிர்ஷ்ட நிறம் - கரும் பச்சை. அதிர்ஷ்ட எண் - 9, 18. விருச்சிகம் உரிய ஆதிக்கக் கிரகம் - செவ்வாய். அதிர்ஷ்ட மலர் - செண்பகம். அதிர்ஷ்டக் கல் - பவளம். அதிர்ஷ்ட நிறம் - சிவப்பு. அதிர்ஷ்ட திசை - தெற்கு. அதிர்ஷ்ட எண் - 9. நீங்கள் வணங்க வேண்டிய தெய்வம் - சுப்பிரமணியர். பொதுப்பலன்: 2012 புத்தாண்டு உங்கள் ராசிக்கு என்ன நற்பலன்களை வாரி வழங்குகிறது என்று பார்ப்போம்.
ஜனவரி
இம்மாதத்தில் தொழில், வியாபாரத்தில் மந்தமான போக்கு காணப்படும். புதிய உத்திகளைக் கடைப்பிடிக்க முயற்சி செய்யுங்கள். உத்தியோகம் பார்ப்பவர்கள் மேலதிகாரிகளின் கெடுபிடிகளைச் சமாளிக்கவே நேரம் சரியாக இருக்கும். காசு பணம் இருக்காது. ஆனால் கௌரவம் என்பது துளிகூட குறையாமல் மலையளவுக்கு உயர்ந்து இருப்பீர்கள். செயலிலே அவ்வப்போது அசுரத்தனமான வேகம் இருக்கும். உழைப்பு வீண் போகாது. பரிகாரம்: சூரிய வழிபாடு செய்து வரவும்.
பிப்ரவரி
இம்மாதத்தில் உங்களுடைய உழைப்புக்கு ஏற்ற பலன் கிட்டாது. வேறு சில சமயங்களில் உங்கள் உழைப்பின் பயன் வேறு யாருக்காவது கிடைக்கும். வேலை வெட்டி இல்லாமல் அலைந்து கொண்டிருப்பவர்களுக்கு வேலை கிடைப்பது அரிதாக இருக்கும். அப்படியே கிடைத்தாலும் அது மனதிற்குப் பிடிக்காத வேலையாக இருக்கும். அல்லது குறைந்த ஊதியம் கிடைக்கும் வேலையாக இருக்கும். காசு, பணம் நெருக்கடி இருந்தாலும் சாமர்த்தியமாக சமாளித்துக் கொள்வீர்கள். எதற்கும் அசர மாட்டீர்கள். பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமைகளில் சிவன் வழிபாடு செய்யவும்.
மார்ச்
இம்மாதத்தில் செலவுகள் அனைத்தும் ஒரு மடங்குக்கு இரு மடங்காக ஏற்படும். அவசியச் செலவுகள், அவசரச் செலவுள், மருத்துவ செலவுகள், தண்டச் செலவுகள், விரயங்கள் இவை அனைத்தும் மாறி மாறி ஏற்படும். ஆனால் கலங்க வேண்டாம். பொறுமையும், தைரியமும் இருந்தால் எல்லாச் செலவுகளையும் சமாளித்து விட முடியும். மனைவியின் ஆரோக்கியம் சீராக இருக்காது. அடிக்கடி நோய், நொடி வந்து தொல்லைப்படுத்தும். பரிகாரம்: சிவன் கோவிலில் தீபம் ஏற்றி வழிபடவும்.
ஏப்ரல்
இம்மாதத்தில் பணவரவு திருப்திகரமாக இருக்காது. எப்போதுமே பற்றாக்குறையாகவே இருக்கும். தட்டுப்பாடுகள் அடிக்கடி உங்களைச் சுற்றி வரும். எப்போதும் வரவுகள் சிக்கல் இல்லாமல் வந்து விடாது. தடைகள், தாமதங்கள் போன்றவை குறுக்கிடும். கொடுக்கல், வாங்கலில் தேக்க நிலை ஏற்படும். மாத பிற்பகுதியில் இருந்து சற்று நிதானத்துடன் செயல்பட்டு பலரும் பாராட்டும் அளவிற்கு செல்வாக்கை உயர்த்திக் கொள்வீர்கள். பரிகாரம்: பிரதோஷ வழிபாடு செய்து வருவது நல்லது.
மே
இம் மாதத்தில் உங்களையும் மீறிய நிலையில் உங்களிடமிருந்து தேவையற்ற வார்த்தைகள் வெளிப்படும். இடக்காகப் பேசுவது, எடுத்தெறிந்து பேசுவது, தவணை வைத்துச் சவால் விடுவது, போலி சத்தியம் செய்வது போன்றவற்றை நீங்கள் அவசியம் தவிர்க்க முயற்சி செய்ய வேண்டும். சிலருக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். சிலருக்கு பதவி உயர்வு கிட்டும். சிறந்த மனிதர் என்ற பாராட்டும் கிட்டும். பரிகாரம்: தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்யவும்.
ஜூன்
இம்மாதத்தில் நீங்கள் மனைவி மக்களின் வசதியை பெருக்க முயற்சி செய்வீர்கள். உற்றார் உறவினர் மத்தியில் உங்கள் செல்வாக்கையும், மதிப்பையும் உயர்த்திக் கொள்ள முயற்சி செய்வீர்கள். ஆனால் எதுவுமே நீங்கள் எதிர்பார்க்கும் அளவுக்கு நடக்காது. இருப்பினும் சாமர்த்தியமாக சமாளித்து நினைத்ததை சாதிப்பீர்கள். பரிகாரம்: சூரிய வழிபாடு செய்து வரவும்.
ஜூலை
இம்மாதத்தில் தொடர்ந்து உங்களுக்குப் பலவகையான செலவுகளும் விரயங்களும் ஏற்பட்டாலும் எல்லாவற்றையுமே சமாளிக்கும் அளவுக்கு எப்படியாவது வருமானம் வந்து விடும். எதிர்பாராத வகையில் ஆதாய வரவுகள் ஏற்படும். விரும்பும் பொருட்களையும் வாங்க முடியும். வெற்றி ஒன்றே லட்சியமாக இருக்கும். எடுத்த காரியத்தை முடிப்பதிலேயே குறியாக இருப்பீர்கள். இம்மாதத்தைப் பொறுத்த வரை தங்களது எண்ணங்கள் செயல்கள் அனைத்தும் சாதிக்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் இருக்கும். பரிகாரம்: லட்சுமி நரசிம்மர் வழிபாடு நன்மை தரும்.
ஆகஸ்ட்
இந்த மாதத்தில் நாவடக்கம் தேவை. யாரிடம் பேசினாலும் அவர்களுக்கு உரிய மரியாதை கொடுக்க வேண்டும். வாக்கு வாதங்கள் ஏற்படலாம். அதில் தவறில்லை. வேலைவாய்ப்புகளில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் உண்டாகும். அலைச்சல்களும் செலவுகளும் அதிகரிக்கும். வெளி வட்டாரங்களில் உங்களுக்குச் சாதகமான போக்கு ஏற்படாது. அதை உங்களில் நன்றாக தெரிந்து கொள்ள முடியும். பரிகாரம்: அம்மன் வழிபாடு நல்லது.
செப்டம்பர்
இம்மாதத்தில் பெரிய திட்டங்களை ஒதுக்கி வையுங்கள்; சிறுசிறு திட்டங்களை மட்டும் நிறைவேற்றிக் கொள்ள முயற்சி செய்யுங்கள். ஓரளவு வெற்றி கிட்டும். பொதுவாக இந்த நேரத்தில் யாரிடம் உதவி கேட்டாலும் கிடைக்காது. உழைப்பும், அலைச்சல்களும் நாளுக்கு நாள் அதிகரித்தாலும் அதற்கு ஏற்ற பலன் நிச்சயமாக காத்திருக்கின்றது. பரிகாரம்: வெள்ளிக்கிழமையில் அம்மன் சன்னதியில் தீபம் ஏற்றி வழிபடவும்.
அக்டோபர்
இம்மாதத்தில் வருமானம் திருப்திகரமாக இருக்கும். நாலைந்து வழிகளிலிருந்தும் பணம் கைக்கு வந்து சேரும். எல்லாம் உங்களுக்கு ஏற்படப் போகும் செலவுகளைச் சமாளிப்பதற்காக வருமானம் தொடர்பான அனைத்து வேலைகளிலும் நீங்கள் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். அப்போது தான் ஓரளவு பலனாவது கிட்டும். தொழில், வேலை வாய்ப்புகளில் கூடுதல் கவனம் தேவை. பரிகாரம்: ஆஞ்சனேயர் வழிபாடு நல்லது.
நவம்பர்
இம்மாதத்தில் தொழில், வியாபாரத்தில் புதிது புதிதாகச் சிக்கல்கள் தோன்றும். அந்தச் சிக்கல்களைப் பொறுமையாகச் சமாளிக்க வேண்டும். உத்தியோகம் பார்ப்பவர்கள் அலுவலகத்திற்கு வேண்டா வெறுப்பாகச் செல்வார்கள். அங்கு அத்தனை பிரச்சினைகள் இருக்கும். இம்மாதத்தில் ஆரோக்கியம் வழக்கம் போல் திருப்திகரமாக இருக்காது. முதுகுவலி, கால்வலி, மூட்டு வலி, தலைவலி என்று ஏகப்பட்ட வலிகள் உங்களை பாடாய்ப் படுத்தும். சோர்ந்து படுத்து விடுவீர்கள். வெளியூர்ப் பயணங்கள் பெரும்பாலும் ஏமாற்றத்தைக் கொடுக்கும். புதிய நண்பர்களிடம் பழகும் போது சற்று எச்சரிக்கையாக இருங்கள். பரிகாரம்: தட்சிணாமூர்த்தி வழிபாடு நல்லது.
டிசம்பர்
இம்மாதத்தில் குடும்பத்தில் உங்கள் பேச்சை யாரும் கேட்க மாட்டார்கள். நீங்கள் அவர்களுடைய தேவைகளைப் பூர்த்தி செய்யவில்லை என்று கோபப்படுவார்கள். தொழில், வியாபாரத்தில் முழுக்கவனம் செலுத்த வேண்டிய அவசியம் உண்டாகும். கலைஞர்களுக்குத் தங்கள் திறமையை வெளிப்படுத்தி வருமானத்தைப் பெருக்கச் சந்தர்ப்பம் கிட்டாது. பரிகாரம்: துர்க்கை வழிபாடு நல்லது.

0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India