2012 - ம் வருட ராசிபலன்


இனிமையான பேச்சால் அசாத்தியமாக முடித்துக் காட்டும் கும்ப ராசி அன்பர்களே! எந்த சூழலிலும் சலனத்திற்கு ஆட்படாமல், தெளிவாக முடிவு எடுப்பீர்கள். என் கடன் பணி செய்து கிடப்பதே என்று நினைக்கும் நீங்கள் உங்கள் ஆரோக்கியம் மற்றும் குடும்ப வாழ்விலும் கவனம் செலுத்துவது நல்லது. சனியை தன் ராசிநாதனாகக் கொண்ட இவர்கள் நிதானமாகவும் பொறுமையாகவும் வேலை செய்யும் குணம் உடையவர்கள். வீண் வம்புக்கு போகாத இவர்கள் வந்த வம்புக்கு தகுந்த பதிலடி கொடுப்பார்கள். அடுத்தவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்கும் குணம் உடைய இவர்கள் மற்றவர்களும் தங்களுடைய உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். அவிட்டம் நட்சத்திரக்காரர்களுக்கு வேதை(ஆகாதது) மிருக சீரிடம், திருமணம் செய்யவும், தொழில் கூட்டுச் சேர்க்கவும் பொருந்தாத நட்சத்திரங்கள் மிருக சீரிடம், அவிட்டம், சித்திரை. அதிர்ஷ்ட மலர் - செண்பக மலர். அதிர்ஷ்டக் கல் - பவளம். அதிர்ஷ்ட நிறம் - சிவப்பு. அதிர்ஷ்ட எண்கள் - 5, 14, 23. அனுகூல தெய்வம் - சுப்பிரமணியர். சதயம் நட்சத்திரக்காரர்களுக்கு வேதை(ஆகாதது) - அஸ்தம், திருமணம் செய்யவும், தொழில் கூட்டு சேர்க்கவும் பொருந்தாத நட்சத்திரங்கள் திருவாதிரை, அஸ்தம், சுவாதி, திருவோணம். சதயம், ரோகிணி ஆகியவைகள் 6. அதிர்ஷ்ட மலர் - மந்தாரை. அதிர்ஷ்டக் கல் - கோமேதகம். அதிர்ஷ்ட நிறம் - கரு மஞ்சள். அதிர்ஷ்ட எண்கள் - 6, 15, 24. அனுகூல தெய்வம் - பத்ரகாளி. பூரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு வேதை(ஆகாதது) உத்திரம், திருமணம் செய்யவும், தொழில் கூட்டு சேர்க்கவும் பொருந்தாத நட்சத்திரங்கள் - கார்த்திகை, புனர்பூசம், உத்திரம், விசாகம், உத்திராடம், பூரட்டாதி ஆகியவைகள் 6. அதிர்ஷ்ட மலர் - முல்லை. அதிர்ஷ்டக் கல் - புஷ்ப ராகம். அதிர்ஷ்ட நிறம் - மஞ்சள். அதிர்ஷ்ட எண்கள் - 7, 16, 25. அனுகூல தெய்வம் - பிரம்மா. பொதுப்பலன்கள்: இந்த புத்தாண்டு 2012 உங்கள் ராசிக்கு எப்படி மலர்கிறது என்று பார்ப்போம்.

ஜனவரி
இம்மாதத்தில் தகப்பனாருக்கு அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்படும். கடுமையான வேலைப்பளு காரியச் சிரமங்கள், அதிகமான செலவினங்கள், அசௌகரியங்கள் போன்றவை ஏற்படும். தான தருமக்காரியங்கள் தடைப்படும். புண்ணியத் தலப் பிரயாணங்களுக்காக நீங்கள் போடும் திட்டங்கள் தடைப்படும். அல்லது தள்ளிப்போகும். புத்தாண்டின் முதல் மாதத்தின் துவக்கம் சற்று டல்லாக இருந்தாலும் மாதத்தின் இரண்டாம் வாரத்தில் இருந்து முன்னேற்றப் பாதைக்கான வழி திறக்க இருக்கின்றது. பரிகாரம்: அம்மன் வழிபாடு நல்லது.
பிப்ரவரி
இம்மாதத்தில் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும் என்று சொல்ல முடியாது. ஆனால் தேவைக்கேற்ற பணம் எப்படியாவது கைக்கு வந்து சேர்ந்து விடும். இம்மாதத்தைப் பொறுத்தவரை குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளும், குதூகலமும் ஏற்பட இருக்கின்றது. திருமண காரியங்கள் ஜோராக நடக்கும். வீடு, நிலம் போன்ற அசையா சொத்துக்களை வாங்கும் முயற்சிக்கு வெற்றி கிட்டும். மாத பிற்பகுதியில் ஒரு சில சங்கடங்கள் வரும். இருந்தாலும் சமாளித்துக் கொள்வீர்கள். பரிகாரம்: புண்ணிய ஸ்தல வழிபாடு செய்யவும்.
மார்ச்
இம்மாதத்தில் சண்டைச் சச்சரவுகள் வரும். ஆனால் பெரிய பாதிப்பு ஏற்படாது. சமாதானமாகப் போய் விடுவீர்கள். வழக்கு விவகாரங்கள் இழுபறியாகவே இருக்கும். நோய் நொடிகள் வந்தாலும், உடனுக்குடன் குணமாகி விடும். எனினும் சிறிய அளவில் மருத்துவச் செலவு ஏற்பட்டுக் கொண்டுதான் இருக்கும். அடுத்தடுத்து நெருக்கடிகள் ஏற்படும். எனினும் எல்லாவற்றையும் சமாளித்து விடுவீர்கள். சிறு விபத்துகளில் சிக்கிக் கொள்ள வாய்ப்பு உண்டு. பரிகாரம்: அனுமனை வழிபடுவது நல்லது.
ஏப்ரல்
இம்மாதத்தில் கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டாலும் அது வெளியே தெரியாது. உடன் பிறந்தவர்களால் செலவினங்களும் ஏற்படும். விரயங்களும் உண்டாகும். உடல் நலனில்கூட சற்று கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. திருமணப் பேச்சுவார்த்தையில் மந்தமான போக்கு காணப்படும். இம்மாதத்தைப் பொறுத்த வரை எதிலும் சற்று மந்தத் தன்மை தொடரும். வாழ்க்கை துணைவர், நண்பர்கள் வகையில் சிறு கருத்து வேறுபாடுகள் உருவாக வாய்ப்புள்ளது. பரிகாரம்: ஆஞ்சநேயருக்கு தீபம் ஏற்றி வழிபாடு செய்யவும்.
மே
இம்மாதத்தில் உங்கள் பொருளாதார நிலை எப்போதும் பற்றாக்குறையாகவே இருக்கும். வருமானம் தொடர்பான செயல்களில் தடைகள், தடங்கல்கள், தாமதங்கள், இடையூறுகள் போன்றவை ஏற்படும். உங்கள் உழைப்பிக்கேற்ற ஊதியம் கிட்டாது. சில சமயங்களில் உங்கள் உழைப்பின் பயனைப் பிறர் தட்டிச் சென்று விடுவார்கள். இருப்பினும் உங்கள் செலவுகளைச் சமாளிக்கும அளவுக்கு வருமானம் வந்து விடும். இம்மாதத்தைப் பொறுத்த வரை எவ்வளவு சிரமங்கள் வந்தாலும் அதை சாமர்த்தியமாக எதிர்கொள்ளும் வாய்ப்பும், சூழ்நிலையும் உருவாகும். பரிகாரம்: சிவன் வழிபாடு நல்லது.
ஜூன்
இம்மாதத்தில் மனதில் தைரியம் குறையும். அதனால் துணிச்சலாகச் செயல்பட தயங்குவீர்கள். எதிர்த்து நின்று பேச வேண்டிய நேரத்தில்கூட பணிந்து போவீர்கள். மனதில் நம்பிக்கை நீங்கி அவநம்பிக்கை குடி கொள்ளும். எந்தக் காரியத்தைச் செய்யத் தொடங்கினாலும் அதை வெற்றிகரமாகச் செய்து முடிக்க முடியுமா என்ற சந்தேகம் ஏற்படும். அந்தச் சந்தேகமே உங்களுக்குத் தோல்வியைத் தேடிக் கொடுத்து விடும். எனினும் சிறுசிறு வெற்றிகளை அடைவதில் சிரமம் இருக்காது. பரிகாரம்: லட்சுமி நரசிம்மன் வழிபாடு நல்லது.
ஜூலை
இம்மாதத்தில் அவசரப்பட்டு வார்த்தைகளை கொட்டுதல், வாக்குவாதங்களின் போது தரக்குறைவாகப் பேசுதல் போன்றவை காரணமாகச் சிலரைப் பகைத்துக் கொள்ள நேரிடும். ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்காது. அடிக்கடி நோய் நொடிகள் என்று ஏற்பட்டு உங்களை முடக்கிப் போட்டு விடும். அடிக்கடி மருத்துவச் செலவு ஏற்படும். உமது இடைவிடாத முயற்சியால் எல்லாம் இனிதாக முடியும். பரிகாரம்: மஹா விஷ்ணு வழிபாடு நல்லது.
ஆகஸ்ட்
இம்மாதத்தில் திடீர்ச் செலவுகளைச் சமாளிக்க கடன் வாங்குவீர்கள். ஆனால் வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாது. பழைய கடன்களும் அவ்வப்போது தொல்லை கொடுக்கும். ஆனால் நீங்கள் எதற்காகவும் கவலைப்பட வேண்டியதில்லை. இம்மாதத்தைப் பொறுத்தவரை பெரும் சிக்கலில் இருந்து தப்பி வந்தவர் போல இருப்பீர்கள். என்ன புண்ணியம் செய்தேனோ ஒருவழியாகத் தப்பித்தேன் என்று நிம்மதி பெருமூச்சு விடுவீர்கள். பரிகாரம்: மகான்களின் ஆசி பெறுவது நல்லது.
செப்டம்பர்
தொழில், வியாபாரத்தில் முன்னேற்றமான போக்கு காணப்பட்டாலும் இலாபம் குறைவாகத்தான் கிட்டும். உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு அலுவலகத்தில் மறைமுக எதிர்ப்பு தோன்றும். கலைஞர்களுக்குச் செலவுகள் அதிகமாக ஏற்படும். குடும்பத்தில் யாருக்காவது வேலை கிடைப்பது போல் இருந்தால் உடனே கிடைத்து விடாது. இழுத்துக்கொண்டே போகும். சுபச்செலவுகள் ஏற்படும். பரிகாரம்: அம்மன் வழிபாடு நல்லது.
அக்டோபர்
இம்மாதத்தில் உங்களுடைய பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்காது. ஆயினும் செலவுகள் ஏற்படும் போது அவற்றைச் சமாளிக்கும் அளவுக்கு பணம் கைக்கு வந்து சேர்ந்து விடும். கொடுக்கல், வாங்கலில் குளறுபடி காணப்படும். பழைய கடன்களைத் தீர்க்க புதிய கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே நெருக்கமான உறவு காணப்படும். பிள்ளைகளின் படிப்பு வகையில் சற்று அதிகமாகச் செலவு ஆகும். பரிகாரம்: பெருமாள் வழிபாடு நல்லது.
நவம்பர்
தொழில், வியாபாரத்தில் ஏற்றமும், இறக்கமும் காணப்படும். உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு அலுவலகத்தில் சில நெருக்கடிகள் ஏற்பட்டு விலகும். கலைஞர்களுக்கு புதிய தொடர்புகளால் ஆதாயம் இருக்காது. வீண் செலவுகள்தான் ஏற்படும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தலை தூக்கும். பிள்ளைகளின் நடவடிக்கை திருப்திகரமாக இருக்காது. உடன் பிறந்தவர்களாலும் சில பிரச்சினைகள் ஏற்படும். பரிகாரம்: அம்மன் சன்னதியில் தீபம் ஏற்றி வழிபாடு செய்யவும்.
டிசம்பர்
தொழில் வியாபாரம் சுறுசுறுப்பாக நடைபெறும். புதிதாகத் தோன்றும் நெருக்கடிகளை எளிதாகச் சமாளித்து விடுவீர்கள். உத்தியோகம் பார்ப்பவர்களின் கடின உழைப்புக்கும் நேர்மைக்கும் மேலதிகாரிகளிடமிருந்து நல்ல பாராட்டுகள் கிடைக்கும். குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே நெருக்கமான உறவு காணப்படும். தாய்வழி உறவினர்கள் மூலமாகச் சில நல்ல உதவிகள் கிடைக்கும். பரிகாரம்: அம்மன் வழிபாடு செய்வது நல்லது.

0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India