2012 - ம் வருட ராசிபலன்


மற்றவர்களின் மனதை புரிந்து கொண்டு நடக்கும் கடக ராசி நேயர்களே! மனதில் உணர்ச்சி வசப்படும் குணம் உடைய கடக ராசிக்காரர்கள் இளகிய மனம் படைத்தவர்கள். எதிலும் சற்று அவசரப்படும் குணம் உடைய நீங்கள் கோபதாபங்களுக்கு இடம் கொடுக்காமல் இருந்தால் வாழ்வில் உயர்வு நிச்சயம். கலை மற்றும் எழுத்துத் துறையில் ஈடுபாடு கொண்ட கடக ராசிக்காரர்களை புகழும் பெயரும் தேடி வரும். கவர்ச்சியான முக அமைப்பைக் கொண்ட இவர்களுக்கு நிறைய நண்பர்கள் உண்டு. சந்திரனை தன் ராசி அதிபனாகக் கொண்ட இவர்கள் பெரும்பாலும் கற்பனை உலகில் சஞ்சரிப்பார்கள். கடினமானப் பிரச்சினைகளைத் தீர்க்கும் இவர்கள் சில நேரங்களில் சிறிய பிரச்சினைகளுக்காக மனம் வருந்துவார்கள். புனர்பூசம் நட்சத்திரக்காரர்களுக்கு வேதை(ஆகாதது) உத்திராடம் நட்சத்திரம். திருமணம் செய்ய தொழில் கூட்டு சேர்க்கவும். உங்களுக்கு ஆகாத நட்சத்திரங்கள் 6 அவைகள் புனர்பூசம், கார்த்திகை, உத்திரம், உத்திராடம், விசாகம், பூரட்டாதி. அதிர்ஷ்ட மலர் - முல்லை. அனுகூல தெய்வம் - பிரம்மா. அதிர்ஷ்டக் கல் - கனக புஷ்பராகம். அதிர்ஷ்ட நிறம் - வெளிர் மஞ்சள். அதிர்ஷ்ட எண் - 7. பூசம் நட்சத்திரக்காரர்களுக்கு வேதை(ஆகாதது) பூராடம் நட்சத்திரம். திருமணம் செய்ய, தொழில் கூட்டு சேர்க்கவும் உங்களுக்கு ஆகாத நட்சத்திரங்கள் 6. அவைகள் பூசம், பரணி, பூரம், அனுஷம், பூராடம், உத்திரட்டாதி. அதிர்ஷ்ட மலர் - கருங்குவளை. அனுகூல தெய்வம் - எமன். அதிர்ஷ்டக் கல் - நீலக்கல். அதிர்ஷ்ட நிறம் - கறுப்பு. அதிர்ஷ்ட எண் - 8. ஆயில்ய நட்சத்திரக்காரர்களுக்கு வேதை(ஆகாதது) மூலம் நட்சத்திரம். திருமணம் செய்ய, தொழில் கூட்டு சேர்க்கவும் உங்களுக்கு ஆகாத நட்சத்திரங்கள் 6 (ரச்சு). அவைகள் அசுவினி, ஆயில்யம், மகம், மூலம், கேட்டை, ரேவதி. அதிர்ஷ்ட மலர் - வெண்காந்தள். அனுகூல தெய்வம்- மகா விஷ்ணு, பெருமாள். அதிர்ஷ்டக் கல் - மரகதம். அதிர்ஷ்ட நிறம் - பச்சை. அதிர்ஷ்ட எண் - 9. கடக ராசிக்குரிய ஆதிக்கக் கிரகம்: சந்திரன். அதிர்ஷ்ட மலர் - வெள்ளல்லி. அதிர்ஷ்டக் கல் - முத்து. அதிர்ஷ்ட நிறம் - வெண்ணிறம். அதிர்ஷ்ட திசை - வடமேற்கு. அதிர்ஷ்ட எண் - 2. நீங்கள் வழிபட வேண்டிய தெய்வம் - பார்வதி. பொதுப்பலன்: அன்பை அள்ளித் தருவதில் வல்லவராக விளங்கும் கடக ராசி நேயர்களுக்கு இந்த 2012 புத்தாண்டு எப்படி மலர்கிறது என்று பார்ப்போம்.


ஜனவரி


இந்த மாதத்தில் தொழில், வியாபாரம் சுறுசுறுப்பில்லாமல் நடைபெறுவது போல் தோன்றினாலும் எதிர்பார்த்ததை விட அதிக லாபம் கிடைக்கும். உத்தியோகம் பார்ப்பவர்கள் மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளானாலும் எதிர்பாராத சில சலுகைகளைப் பெறுவார்கள். குடும்பத்தில் சிறுசிறு சண்டை சச்சரவுகள் பூசல்கள் ஏற்படும். சில குடும்பப் பிரச்சினைகளைத் தீர்க்க மனைவியின் ஆலோசனைப்படி நடந்து கொள்து நல்லது. பரிகாரம்: சிவ வழிபாடு செய்து வரவும்.

பிப்ரவரி


இந்த மாதத்தில் எதுவுமே நீங்கள் நினைப்பது போல் நடக்காது. எல்லாமே ஏட்டிக்குப் போட்டியாகத் தான் நடைபெறும். உங்களுக்கு அவசரமாகத் தேவைப்படும் போது உங்கள் கைக்கு பணம் வராது. அதே சமயம் உங்களுக்குத் தேவைப்படாத போது கைக்குப் பணம் வந்து சேரும். நேற்று வரை நண்பர்களாகப் பழகியவர்கள் இன்று எதிரிகளாக மாறுவார்கள். அதே சமயம் உங்களுக்கு விரோதமாகச் செயல்பட்டு வந்தவர்கள் இன்று மனம் மாறி நட்டை நாடி வருவார்கள். பரிகாரம்: முருகப் பெருமானை வழிபடவும்.

மார்ச்


இந்த மாதத்தில் எந்தவொரு வேலையையும் எடுத்தோம், முடித்தோம் என்று செய்து விட முடியாது. எல்லாமே இழுபறியாக இருக்கும். சின்னச் சின்ன காரியங்களைச் செய்து முடிக்கக்கூட மிகவும் சிரமப்பட வேண்டியிருக்கும். சிறு பிரச்சினையாக இருந்தால்கூட அதை ஒருவரின் உதவியுடன் சமாளிக்கலாமா என்று தான் யோசிப்பீர்கள். நீங்களே அதைச் சமாளித்து விடலாம் என்ற எண்ணம் ஏற்படாது. முடிவுகள் எடுப்பதில் தடுமாற்றம் ஏற்படும். பரிகாரம்: சூரிய வழிபாடு செய்து வரவும்.

ஏப்ரல்


இம்மாதத்தில் சற்று எச்சரிக்கையாக இருப்பது அவசியம். ஆபத்து வரக் கூடும் என்று எச்சரிக்கையுடன் இருந்தால் ஆபத்து வரும் போது தடுமாறிப் போக வேண்டியதும் இல்லை. ஆபத்தைச் சமாளிக்க முடியாமல் தவிக்க வேண்டியதும் இல்லை. பரிகாரம்: சிவன் வழிபாடு செய்து வரவும்.

மே


இந்த மாதத்தில் உங்களுடைய பொருளாதார நிலையில் முன்னேற்றமான போக்கு காணப்படும். பணத்தை நீங்கள் தேடிச் செல்ல வேண்டியதில்லை. பணம் உங்களைத் தேடி வரும். எல்லாவகையான செலவுகளையும் எளிதாகச் சமாளிப்பீர்கள். இழுத்துக் கொண்டே சென்ற வேலைகளை எளிதாகச் செய்ய முடியும். எதிர்பாராத இடங்களிலிருந்து நல்ல உதவிகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். வெளியூர்ப் பயணங்கள் ஆதாயத்தைத் தேடிக் கொடுக்கும். பரிகாரம்: செவ்வாய்க்கிழமைகளில் முருகனை வழிபடவும்.

ஜூன்


இம்மாதத்தில் பொறுப்புகள், கடமைகள், அலுவல்கள் ஆகியவை அதிகரித்து பெருஞ்சுமையாகி உங்களைத் திணற வைக்கும். வருமானத்திற்கு ஆதாரமான காரியங்கள் அனைத்திலும் சிரமங்கள் அதிகமாக காணப்படும். ஊக்கமும் உடல்நலமும் அவ்வப்போது பின்னடையும். எந்த வேலையாக இருந்தாலும் தாமதமாகத் தான் செய்து முடிக்க முடியும். பரிகாரம்: அம்மன் வழிபாடு செய்யவும்.

ஜூலை


இம்மாதத்தல் தொழில், வியாபாரத்தில் மந்தமான போக்கு காணப்படும். கணக்கு வழக்குகள் குளறுபடியாக இருக்கும். உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகமாக இருக்கும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்களால் ஓரளவு தான் வருமானம் வரும். குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே நெருக்கமான உறவு காணப்படும். பிள்ளைகளின் படிப்பு திருப்திகரமாக இருக்கும். உறவினர்களால் சில பிரச்சினைகள் ஏற்படும். பரிகாரம்: லட்சுமி நாராயண பூஜை செய்யவும்.

ஆகஸ்ட்


இம்மாதத்தில் கையில் பண நடமாட்டம் தாராளமாகக் காணப்படும். இப்போது உங்களிடம் ஒருவித வேகம் தெரியும். அந்த வேகத்துடன் செயல்பட்டு நின்று போன வேலைகளையும் செய்து முடிப்பீர்கள். ஓரளவு ஆதாயத்தையும் தேடிக் கொள்வீர்கள். வீடு, மனை, வாகனம், நிலம் வகையில் ஆதாயம் உண்டு. பரிகாரம்: சூரிய வழிபாடு செய்து வரவும்.

செப்டம்பர்


இம்மாதத்தில் உங்களிடம் ஒரு முரட்டுத்தனமான துணிச்சல் காணப்படும். குடும்பத்தில் சந்தோஷம் களை கட்டும். நிறைய வேலைகள் இருக்கும். ஆனால் எதையும் செய்யாமல் வீட்டில் அமர்ந்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ரசித்துப் பார்த்துக் கொண்டிருப்பீர்கள். சுப நிகழ்ச்சிகள் நடக்கும். குடும்பத்தில் சுப விரயங்கள் அதிகரிக்கும். பரிகாரம்: சிவனுக்கு தீபம் ஏற்றி வழிபடவும்.

அக்டோபர்


இம்மாதத்தில் சின்ன சின்ன அளெகரியங்களும் அடிக்கடி ஏற்படும். சின்னச் சின்ன வேலைகளைச் செய்து முடிக்க அதிக முயற்சி தேவைப்படும். இம்மாதத்தைப் பொருத்த வரை எதிலும் சற்று கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம். பரிகாரம்: அனுமன் வழிபாடு நல்லது.

நவம்பர்


இம்மாதத்தில் தொழில் வியாபாரத்தில் புதிய நெருக்கடிகள் தோன்றினாலும் கிடைக்க வேண்டிய லாபம் தாராளமாக கிட்டும். உத்தியோகம் பார்ப்பவர்களின் கடுமையான உழைப்பிற்கு நல்ல பலன் கிட்டும். கலைஞர்களுக்கு வருமானம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மனைவியின் அலட்டல்களும், கட்டுப்பாடுகளும் அதிகமாக இருக்கும். பிள்ளைகளின் தேவைகளையும் விருப்பத்தையும் சரிவரப் பூர்த்தி செய்ய முடியாது. பரிகாரம்: அம்மன் வழிபாடு நல்லது.

டிசம்பர்


இந்த மாதத்தில் கடமைகளையும், காரியங்களையும் செயல்படுத்துவது எளிதாக இருக்காது. தாமதக் குறுக்கீடுகள் எந்த வேலையும் உடனுக்குடன் முடியாமல் இழுபறியாக இருக்கும். எதிலும் நிதானமும் எச்சரிக்கையும் அவசியம். உங்களுக்கு நம்பிக்கை ஏற்படாத எந்தச் செயலிலும் கண்டிப்பாக ஈடுபடக் கூடாது. பரிகாரம்: லட்சுமி நரசிம்மரை வழிபடவும்.

0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India