2012 - ம் வருட ராசிபலன்


கடமை, கட்டுப்பாடு ஆகிய இரண்டையும் தன் இரு கண்களாகக் கொண்டு செயல்படும் மகர ராசி நேயர்களே! எப்போதும் தன்னுடைய செயல்களில் ஒழுங்கையும், நேர்மையையும் கடைபிடிக்கும் மகர ராசி நேயர்கள் வெற்றி கிடைக்கும் வரை தன் காரியத்தில் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள். பொறுமையின் சிகரமாய் திகழும் இவர்கள் தன்னுடைய கருத்துக்களை வெளியிடும் போது சிறிது இனிமையையும் சேர்த்துக் கொண்டால் அவர்களின் கருத்துக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். சனியை தன் ராசிநாதனாகக் கொண்ட இவர்கள் சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற அதிகம் பாடுபடுவார்கள். பொது நலனுக்கு என்று பாடுபடும் இவர்கள் உறுதியான செயல்பாடு உடையவர்களாகத் திகழ்வதோடு மற்றவர்களுக்கும் சிறந்த வழிகாட்டியாக விளங்குவார்கள். உத்திராடம் நட்சத்திரக்காரர்களுக்கு வேதை(ஆகாதது) புனர்பூசம் நட்சத்திரம். திருமணம் செய்ய தொழில் கூட்டு சேர்க்கவும் பொருந்தாத நட்சத்திரங்கள் 6 அவைகள் - கார்த்திகை, புனர்பூசம், விசாகம், உத்திரம், உத்திராடம், பூரட்டாதி. அதிர்ஷ்ட மலர் - தாமரை. அனுகூல தெய்வம் - சிவன். அதிர்ஷ்டக் கல் - மாணிக்கம். அதிர்ஷ்ட நிறம் - பச்சை. அதிர்ஷ்ட எண்கள் - 3, 12, 21. திருவோணம் நட்சத்திரக்காரர்களுக்கு வேதை(ஆகாதது) திருவாதிரை நட்சத்திரம். திருமணம் செய்ய தொழில் கூட்டு சேர்க்கவும் பொருந்தாத நட்சத்திரங்கள் - 6. அவைகள் ரோகிணி, திருவாதிரை, அஸ்தம், சுவாதி, திருவோணம், சதயம். அதிர்ஷ்ட மலர் - அல்லி. அனுகூல தெய்வம் - மகா விஷ்ணு. அதிர்ஷ்டக் கல் - முத்து. அதிர்ஷ்ட நிறம் - கருநீலம். அதிர்ஷ்ட எண்கள் - 4, 13, 22. அவிட்டம் நட்சத்திரக்காரர்களுக்கு வேதை(ஆகாதது) மிருக சீரிட நட்சத்திரம் திருமணம் செய்ய தொழில் கூட்டு சேர்க்கவும் பொருந்தாத நட்சத்திரங்கள் சித்திரை, மிருகசீரிடம், அவிட்டம் ஆகியவைகள் 3. இந்த 3 நட்சத்திரங்கள் கூடாது. (ஏக ரச்சு) மற்றவர்களுக்கு எல்லாம் 6 நட்சத்திரங்கள் ஆகாதவைகளாக வரும் போது உங்களுக்கு மட்டும் 3 நட்சத்திரங்கள் ஆகாதவை என்பது சிறப்பு தானே! அதிர்ஷ்ட மலர் - செண்பக மலர். அதிர்ஷ்டக் கல் - பவளம். அனுகூலத் தெய்வம் - சுப்பிரமணியர். அதிர்ஷ்ட நிறம் - சிவப்பு. அதிர்ஷ்ட எண்கள் - 5, 14, 23, மகரம் உரிய ஆதிக்கக் கிரகம் - சனி. அதிர்ஷ்ட மலர் - கருங்குவளை. அதிர்ஷ்டக் கல் - நீலம். அதிர்ஷ்ட நிறம் - கறுப்பு. அதிர்ஷ்ட திசை - மேற்கு. அதிர்ஷ்ட எண் - 8. நீங்கள் வணங்க வேண்டிய தெய்வம் - சிவபெருமான். பொதுப்பலன்கள்: இந்த புத்தாண்டு உங்கள் ராசிக்கு எப்படி மலர்கிறது என்று பார்ப்போம்.

ஜனவரி
இம்மாதத்தில் உங்களுடைய பொருளாதார நிலையில் சிறிது முன்னேற்றம் ஏற்படும். செலவுகளைச் சமாளிக்கும் அளவுக்கு வருமானம் வரும். தகப்பனாரின் உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். புத்தம் புதிய ஆடை அணிகள் வந்து சேரும். குடும்பத் தேவைகள் அத்தியாவசிய பொருட்கள் வந்து சேரும். உங்கள் மதிப்பு மரியாதை உயரும். பரிகாரம்: அம்மன் வழிபாடு நல்லது.
பிப்ரவரி
இம்மாதத்தில் தொழில், வியாபாரம் சற்றுப் பிரகாசமடையும். கூட்டு வியாபாரத்தில் இருந்து வந்த கருத்து வேற்றுமை நீங்கும். உத்தியோம் பார்ப்பவர்களுக்கு வேலைப்பளு குறையும். கலைஞர்களுக்குப் புதிய தொடர்புகளால் வருமானம் பெருகும். குடும்பத்தில் சிறுசிறு பூசல்கள் தோன்றி மறையும். பிள்ளைகள் வகையில் சில திடீர்ச் செலவுகள் நேரிடும். உடன் பிறந்தவர்கள் பகை பாராட்டுவார்கள். பரிகாரம்: வெள்ளிக்கிழமைகளில் அம்மன் வழிபாடு நல்லது.
மார்ச்
இம்மாதத்தில் வருமானத்திற்கும் செயல்பாடுகளுக்கும் சிரமங்கள் உண்டாகும். சௌகரியங்கள் பாதிக்கப்படும். எந்த முயற்சிக்கும் உடனே வெற்றி கிடைத்து விடாது. தீவிரப்படுத்தும் முயற்சிகளுக்கும் போராடித்தான் வெற்றி பெற வேண்டும். வேலை தேடுபவர்களுக்கு உடனே வேலை கிடைத்து விடாது. நிறைய அலைய வேண்டும். அப்படியே வேலை கிடைத்தாலும் அது மன நிறைவை ஏற்படுத்துவதாக இராது. ஊதியமும் குறைவாக இருக்கும். அல்லது தகுதிக்கு குறைந்த வேலையாக இருக்கும். பரிகாரம்: செவ்வாய்கிழமைகளில் அம்மன் வழிபாடு செய்யவும்.
ஏப்ரல்
இம்மாதத்தில் சுயமாகத் தொழில் செய்ய முயற்சிப்பவர்கள், சொந்தமாக வியாபாரம் செய்ய நினைப்பவர்கள் ஆகியோருக்கு அதற்கான சந்தர்ப்பம் கூடி வருவது அரிதாக இருக்கும். அப்படியே அடித்துப் பிடித்து சந்தர்ப்பத்தை உருவாக்கிக் கொண்டாலும் அதன் பின் முன்னேறுவது சிரமமாக இருக்கும். ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும் போதும் உபத்திரவங்களைச் சந்திக்க வேண்டியிருக்கும். இலாபம் பார்ப்பது குதிரைக் கொம்பாக இருக்கும். பரிகாரம்: அனுமனை வழிபாடு செய்வது நல்லது.
மே
இம்மாதத்தில் பொதுவாக நீங்கள் எந்த வேலையைத் தொடங்கினாலும் அதில் தடங்கல் ஏற்படும். அதனால் சிறு வேலையாக இருந்தாலும்கூட அதைத் தொடங்கியதும் வேகமாகச் செய்து முடித்து விட முடியாது. ஒருவேலையைச் செய்து முடிப்பதற்குள் வரிசையாக மூன்று வேலைகள் வந்து நிற்கும். எதை முதலில் செய்வது, எதைச் செய்யாமல் விடுவது என்று புரியாமல் தடுமாறிப் போய் நிற்பீர்கள். உங்களுடைய உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்காது. பரிகாரம்: சூரிய வழிபாடு செய்வது நல்லது.
ஜூன்
இம்மாதத்தில் உங்களுக்குத் தினமும் ஒரு தண்டச் செலவு ஏற்படும். உங்களையும் மீறிய நிலையில் பணம் விரயமாகும். அதே சமயம் வசதி வாய்ப்புகளைப் பெருக்கிக் கொள்ளத் தாராளமாகச் செலவு செய்ய நினைப்பீர்கள். ஆனால் முடியாது. அவசியச் செலவுக்கு என்று எடுத்து வைக்கும் பணம் அநாவசியமாகக் கரைந்து போகும். நீண்ட தூரம் பயணம் அல்லது வெளிநாட்டுப் பயணத்திற்குத் திட்டம் போடுவீர்கள். ஆனால் அது அவ்வளவு சுலபமாக நிறைவேறாது. பரிகாரம்: மஹா விஷ்ணு வழிபாடு நல்லது.
ஜூலை
இம்மாதத்தில் உங்களால் நேரா நேரத்திற்கு சாப்பிட முடியாமல் போகும். பல சமயங்களில் ஆறிப்போன உணவைச் சாப்பிட நேரிடும். நேரம் தவறிச் சாப்பிடுவதால் செரிமானக் கோளாறு, வயிற்று வலி போன்றவற்றால் பாதிப்பு ஏற்படலாம். தாயாருக்கு அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்படும். முன்னை விட ஊக்கமும், ஊட்டம் குறைந்தவராகக் காணப்படுகிறார். உறவினர்களுடன் கருத்து வேற்றுமை ஏற்படும். பரிகாரம்: லட்சுமி நாராயணன் பூஜை செய்யவும்.
ஆகஸ்ட்
இம் மாதத்தைப் பொறுத்தவரை மீண்டும் புகழின் உச்சிக்கு செல்ல அடி எடுத்து வைக்க இருக்கின்றீர்கள். தங்களின் மதிப்பு, மரியாதை, கௌரவத்தை தக்க வைத்துக் கொள்ள கடமையே கண்ணாக செயல்பட இருக்கின்றீர்கள். உங்கள் உழைப்பிற்கு உரிய பலன் நிச்சயம் உண்டு. பரிகாரம்: அம்மன் வழிபாடு நல்லது.
செப்டம்பர்
இம்மாதத்தில் பொருளாதார வகையில் தாராளமாக முதலீடுகளை செய்யத் துணிவீர்கள். வருமானத்தை விட செலவுகள் அதிகமாக இருக்கும். கைக்கு வர வேண்டிய பணம் முழுமையாகக் கைக்கு வந்து சேராது. பகுதி பகுதியாக வரும். அதுவும் தாமதமாக வரும். அதனால் உங்களால் திட்டமிட்டுச் செய்ய முடியாமல் போய் விடும். எப்போதும் பற்றாக்குறை நிலவரமாகவே காணப்படும். புத்திசாலித்தனமாகச் செலவுகளைச் சமாளிக்க வேண்டும். பரிகாரம்: வெள்ளிக்கிழமைகளில் அம்மன் வழிபாடு செய்யவும்.
அக்டோபர்
இம்மாதத்தைப் பொறுத்த வரை மாத முற்பகுதியில் புண்ணிய காரியங்களில் ஈடுபாடும் புனித பயணமும் மேற்கொள்ள வேண்டி வரும். மகான்கள், ஞானிகள் பெரியோர்கள் அருள் ஆசி கிடைக்கும். மாத பிற்பகுதியில் குறிப்பாக கடைசி வாரத்தில் தந்தை வழியில் சங்கடம் நேரிடும். பரிகாரம்: மகான்களின் ஜீவ சமாதி சென்று வழிபடுங்கள்.
நவம்பர்
இம்மாதத்தில் எந்தக் காரியமாக இருந்தாலும் அதை உடனே செய்து முடித்து விடலாம் என்று எண்ணாதீர்கள். தடைகளும், இடையூறுகளும் வரும் என்று எதிர்பாருங்கள். அந்தத் தடைகளும் இடையூறுகளும் சமாளிக்கத் தயாராக இருங்கள். நீங்கள் சற்றும் எதிர்பார்க்காத வகையில் பல அசௌகரியங்கள் ஏற்படும். அதன் காரணமாக உஙகள் உடல்நிலையும், மனநிலையும் பாதிக்கப்படும். பொறுப்புணர்ச்சி காரணமாகச் சில சிரமங்களைப் பெரிதுப்படுத்தாமல் கடமைகளைச் செயல்படுத்திக் கொண்டு வருவீர்கள். திடீர் செலவுகள் கையில் உள்ள பணத்தைக் கரைத்து விடும். பரிகாரம்: துர்க்கை வழிபாடு நல்லது.
டிசம்பர்
இம்மாதத்தைப் பொறுத்த வரை மீண்டும் வசந்தம் பூத்துக் குலுங்க இருக்கின்றது. பொருளாதாரத்தில் அபரிதமான வளர்ச்சி உண்டாகும். வழக்கு விவகாரங்களில் எதிர்பாராத வெற்றி மழை கொட்டும். மாத பிற்பகுதிக்கு மேல் தந்தை வழி மேன்மை அடையும். பரிகாரம்: அம்மன் வழிபாடு செய்வது நல்லது.

0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India