2012 - ம் வருட ராசிபலன்


எதிலும் பரபரப்புடன் ஈடுபடும் குணமுடைய நீங்கள்! சற்றே பொறுமையைக் கடைபிடித்தால் மேலும் சிறப்பான பலன்களைப் பெறலாம். சுக்ரனை தன் ராசிநாதனாகக் கொண்ட இவர்கள் கலை மற்றும் கலை சார்ந்த விஷயங்களில் அதிக ஈடுபாடும், ஆர்வமும் உடையவர்களாக இருப்பதோடு வாசனைத் திரவியம் வசீகரமான ஆடை வகைகள் அழகான ஆபரணங்கள் ஆகியவற்றினை விரும்பி வாங்கி அணியும் இயல்புடையவர்கள். இளகிய மனம் உடைய இவர்கள் சிறிய விஷயங்களுக்காக குழந்தைபோல் பிடிவாதம் பிடிக்கும் இயல்புடையவர்கள். பரந்த மனம் உடைய இவர்கள் பிறருக்கு சமயமறிந்து உதவுவார்கள். கார்த்திகை நட்சத்திரக்காரர்களுக்கு வேதை(ஆகாதது) விசாகம் நட்சத்திரம், திருமணம் செய்யவும் தொழில் கூட்டு சேர்க்கவும் உங்களுக்கு ஆகாத நட்சத்திரங்கள் 6 (ரச்சு) அவைகள் கார்த்திகை, புனர்பூசம், உத்திரம், விசாகம், உத்திராடம், பூரட்டாதி. அதிர்ஷ்ட மலர் - மந்தாரை. அனுகூல தெய்வம் - சிவன். அதிர்ஷ்டக் கல் - மாணிக்கம் - அதிர்ஷ்ட நிறம் - சிவப்பு. அதிர்ஷ்ட எண் - 3. ரோகிணி நட்சத்திரக்காரர்களுக்கு வேதை(ஆகாதது) - சுவாதி நட்சத்திரம் திருமணம் செய்யவும் தொழில் கூட்டு சேர்க்கவும் பொருந்தாத நட்சத்திரங்கள் 6. அவைகள் ரோகிணி, திருவாதிரை, அஸ்தம், சுவாதி, திருவோணம், சதயம். அதிர்ஷ்ட மலர் - அல்லி. அனுகூல தெய்வம் - பார்வதி. அதிர்ஷ்டக் கல் - வைரம். அதிர்ஷ்ட நிறம் - வெண்ணிறம். அதிர்ஷ்ட எண் - 4. மிருகசீரிட நட்சத்திரக்காரர்களுக்கு வேதை(ஆகாதது) - மிருகசீரிடம், சித்திரை அவிட்டம் நட்சத்திரம். திருமணம் செய்யவும், தொழில் கூட்டு சேர்க்கவும் இந்த 3 நட்சத்திரங்கள் கூடாது (ஏக ரச்சு) மற்றவர்களுக்கு எல்லாம் 6 நட்சத்திரங்கள் ஆகாதவைகளாக வரும்போது உங்களுக்கு மட்டும் 3 நட்சத்திரங்கள் தானாகாதவை என்பது சிறப்புதானே! அதிர்ஷ்ட மலர் - செண்பகப்பூ. அதிர்ஷ்டக் கல் - பவளம். அனுகூலத் தெய்வம் - சுப்பிரமணியர். அதிர்ஷ்ட நிறம் - சிவப்பு. செம்மை. அதிர்ஷ்ட எண் - 5. ரிஷப ராசிக்குரிய ஆதிக்க கிரகம்: சுக்ரன். அதிர்ஷ்டமலர் - வெண் தாமரை. அதிர்ஷ்டக் கல் - வைரம். அதிர்ஷ்ட நிறம் - வெள்ளை. அதிர்ஷ்ட திசை - தென்கிழக்கு. அதிர்ஷ்ட எண் - 6. நீங்கள் வணங்க வேண்டிய தெய்வம் - லட்சுமி. பொதுப்பலன்: பிறரை கவர்ந்திழுக்கும் பேச்சுத்திறமை உடைய ரிஷப ராசி நேயர்களே! 2012 புத்தாண்டு உங்களுக்கு என்ன மாதிரியான பலன்களைத் தருகிறது என்று பார்ப்போம்.


ஜனவரி


உங்கள் வாழ்க்கையில் இதுவரை படர்ந்திருந்த இருள் மெதுவாக விலகத் தொடங்கும். மனதில் நிறைந்திருந்த அச்சம். கவலை, குழப்பம், நம்பிக்கையின்மை, தயக்கம், தடுமாற்றம் போன்றவை வேகமாக விலகும். இந்த புத்தாண்டின் முதல் மாதம் உங்களுக்கு ஆதாயமாகவே அமையும். பரிகாரம்: அனுமனை வழிபடுங்கள்.

பிப்ரவரி


இதற்கு முன்னால் நீங்கள் எந்தக் காரியத்தை தொடங்கினாலும் ஏதாவது தடங்கல் ஏற்பட்டு அதை முடிக்க முடியாமல் பாதியிலேயே நிறுத்தியிருப்பீர்கள். இனி அப்படி ஏற்படாது. ஒரு காரியத்தைத் தொடங்கும் போதே அதை முடித்து விட முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டு விடும். அதே போல் அதை வெற்றிகரமாகவும் செய்து முடித்து விடுவீர்கள். பரிகாரம்: சிவ வழிபாடு நல்லது.

மார்ச்


இதற்கு முன்னால் அடிக்கடி உங்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டிருக்கும். குறிப்பாக கால் வலி, காலில் இரத்தக்காயம், காலில் வீக்கம் அல்லது கட்டி தோன்றுதல் போன்றவற்றில் நீங்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம். இனி அந்தப் பாதிப்பு ஏற்படாது. பரிகாரம்: செவ்வாய்கிழமைகளில் அம்மன் வழிபாடு செய்யவும்.

ஏப்ரல்


இதுவரை எதிரிகளால் உங்களுக்குப் பல தொல்லைகள் ஏற்பட்டிருக்கலாம். இனி அந்தத் தொல்லை இராது. பெரும்பாலான எதிரிகள் வலிய வந்து உங்களிடம் நட்பு பாராட்டுவார்கள். இம்மாதத்தைப் பொருத்தவரை சொந்த இடத்தில் இருந்து கொண்டு தனிக்காட்டு ராஜாபோல செயல்பட இருக்கின்றீர்கள். பரிகாரம்: கணபதி வழிபாடு மிகவும் நல்லது.

மே


குடும்பத்தில் சிறுசிறு பூசல்கள் தலை தூக்கினாலும் பெரிய பாதிப்பு ஏற்படாது. சுபச்செலவு ஏற்படும். குடும்பத்தில் பொதுவாக உற்சாகமும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்திருக்கும் தம்பதியர் மீண்டும் ஒன்று சேர்ந்து வாழ்வார்கள். பரிகாரம்: அம்மன் வழிபாடு செய்வது நல்லது.

ஜூன்


மனதில் தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகமாகும். புத்தித் தெளிவுடன் பல நல்ல முடிவுகளை எடுப்பீர்கள். உங்களுடைய உழைப்பை உரிய வகையில் செலுத்திப் பல காரியங்களை வெற்றிகரமாகச் செய்து முடித்து ஆதாயம் தேடுவீர்கள். பரிகாரம்: கணபதிக்கு தீபம் ஏற்றி வழிபடவும்.

ஜூலை


வருமான வழியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வருமானத்தைப் பெருக்கிக் கொள்ள பல நல்ல வாய்ப்புகள் உருவாகும். பொன், பொருள் சேரும். சிலருக்கு வாகன வசதி ஏற்படும். வீடு, நிலம் போன்றவற்றை வாங்கும் முயற்சிக்கு நல்ல வெற்றி கிட்டும். பரிகாரம்: அம்மன் வழிபாடு நல்லது.

ஆகஸ்ட்


தொழில் வியாபாரம் சுறுசுறுப்பாக நடைபெறும். கூட்டு வியாபாரத்தில் இருந்து வந்த கருத்து வேற்றுமை விலகும். உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் பாராட்டுக்கள் கிட்டும். கலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு வேகமாக வருமானம் பெருகும். சில நல்ல வாய்ப்புகள் தேடிவரும். அந்த வாய்ப்புகளைப் புத்திசாலித்தனமாகப் பயன்படுத்திக் கொண்டால் உங்கள் வருமானம் இரண்டு மடங்காக உயரும். பரிகாரம்: தாயார் சன்னதியில் தீபம் ஏற்றி வழிபடவும்.

செப்டம்பர்


பொதுவாக பிறரை நம்பிப் பணமோ அல்லது முக்கியமான வேலைகளையோ ஒப்படைக்காதீர்கள். சில புதிய நண்பர்களின் அறிமுகம் கிட்டும். அவர்களிடம் சற்று எச்சரிக்கையாகப் பழகுவது நல்லது. உங்களை உற்சாகப் படுத்தக்கூடிய சிறுசிறு நிகழ்ச்சிகள் தினமும் நடைபெறும். வாழ்க்கை இனிமை நிறைந்ததாக தோன்றும். பரிகாரம்: சிவ ஆலயம் சென்று வழிபடவும்.

அக்டோபர்


இம்மாதத்தில் புதிய பொருட்களை வாங்குதல், வீட்டில் சிறுசிறு மராமத்து வேலைகள் செய்தல், வாகனத்தைப் பழுது பார்த்தல், பழைய வாகனத்தைக் கொடுத்து விட்டுப் புது வாகனம் வாங்குதல் போன்ற வகையில் பணம் தாராளமாகச் செலவாகும். சில விரையங்களும் ஏற்படலாம். பரிகாரம்: சூரிய வழிபாடு செய்வது நல்லது.

நவம்பர்


குடும்பத்தில் கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகமாகும். திருமணம் தொடர்பான பேச்சு வார்த்தைகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பிள்ளைகளின் நடவடிக்கைகளில் தனிக் கவனம் செலுத்துவது அவசியம். உறவினர் வருகையால் வீட்டில் சில குழப்பங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. பரிகாரம்: அம்மன் வழிபாடு செய்து வரவும்.

டிசம்பர்

இப்போது உங்களுடைய பேச்சிலும், செயலிலும் வேகம் இருக்கும். ஒரு காரியத்தை எடுத்துக் கொண்டால் அதை உடனே செய்து முடித்து விட வேண்டும் என்று துடிப்பீர்கள். முன் கோபத்தையும், வேகத்தையும் தவிர்த்து நிதானமாக செயல்படுங்கள். திடீர் அதிர்ஷ்டத்தை அடைவதற்கான வாய்ப்பும் உண்டு. பரிகாரம்: கணபதி வழிபாடு செய்து வரவும்.

0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India