2012 - ம் வருட ராசிபலன்


நினைத்த இலக்கை அடையும் வரை கடுமையாக உழைக்கும் கன்னி ராசி நேயர்களே! எடுத்த காரியம் முடியும் வரை அதற்காக பாடுபடும் குணமுடைய கன்னி ராசி நேயர்கள் மன வருத்தத்தைத் தாங்குவதிலும் உறுதியாக இருந்தால் வெற்றி மாலை எப்போதும் உங்களுக்கே! தன்னுடைய நேரத்தை ஆக்கப்பூர்வமாக செலவழிப்பதில் கவனமாக இருப்பவர்கள். புதனை தன் ராசி நாதனாக கொண்ட இவர்கள் தங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும் இடங்களில் நன்கு பரிமளிப்பார்கள். செய்யும் செயலில் நேர்த்தியையும், அதற்கான வழி முறையையும் பின்பற்றுவதில் இவர்கள் வல்லவர்கள். பிரச்சினைகள் வருகையில் உணர்ச்சிகளின் அடிப்படையில் முடிவெடுப்பதைத் தவிர்த்து சற்று நடைமுறைத் தீர்வுகளைக் கையாண்டால் செய்யும் வேலைகள் தேங்காமல் இருப்பதோடு உங்கள் உழைப்பிற்குரிய பலனும் தகுந்த நேரத்தில் கிட்டும். உத்திரம் நட்திரக்காரர்களுக்கு வேதை(ஆகாதது) உத்திரட்டாதி நட்சத்திரம் திருமணம் செய்ய தொழில் கூட்டு சேர்க்கவும் பொருந்தாத நட்சத்திரங்கள் 6 அவைகள்- கார்த்திகை, புனர்பூசம், உத்திரம், விசாகம், உத்திராடம், பூரட்டாதி. அதிர்ஷ்ட மலர் - செந்தாமரை. அனுகூல தெய்வம் - லட்சுமி. அதிர்ஷ்டக் கல் - வைரம். அதிர்ஷ்ட நிறம் - சிவப்பு. அதிர்ஷ்ட எண் - 3, 12. அஸ்தம் நட்சத்திரக்காரர்களுக்கு வேதை(ஆகாதது) சதயம் நட்சத்திரம் திருமணம் செய்ய தொழில் கூட்டு சேர்க்கவும் பொருந்தாத நட்சத்திரங்கள் 6. அவைகள் ரோகிணி, திருவாதிரை, அஸ்தம், சுவாதி, திருவோணம், சதயம். அதிர்ஷ்ட மலர் - அல்லி. அனுகூல தெய்வம் - பார்வதி. அதிர்ஷ்டக் கல் - முத்து. அதிர்ஷ்ட நிறம் - வெள்ளை. அதிர்ஷ்ட எண் - 4, 13. சித்திரை நட்சத்திரக்காரர்களுக்கு வேதை(ஆகாதது) மிருக சீரிடம். திருமணம் செய்ய, தொழில் கூட்டு சேர்க்கவும் பொருந்தாத நட்சத்திரங்கள் மிருக சீரிடம், சித்திரை, அவிட்டம் நட்சத்திரம். இந்த 3 நட்சத்திரங்கள் ஆகாதவைகளாக வரும் போது உங்களுக்கு மட்டும் 3 நட்சத்திரங்கள் ஆகாதவை என்பது சிறப்பு தானே! அதிர்ஷ்ட மலர் - செண்பகப்பூ. அதிர்ஷ்டக் கல் - பவளம். அனுகூலத் தெய்வம் - சுப்பிரமணியர். அதிர்ஷ்ட நிறம் - சிவப்பு. அதிர்ஷ்ட எண் - 5, 14. கன்னி உங்களுடைய ஆதிக்கக் கிரகம் - புதன். அதிர்ஷ்ட மலர் - வெண்காந்தள். அதிர்ஷ்டக் கல் - பச்சை. அதிர்ஷ்ட நிறம் - பச்சை. அதிர்ஷ்ட திசை - வடக்கு. அதிர்ஷ்ட எண் - 5. நீங்கள் வழிபடவேண்டிய தெய்வம் - மகா விஷ்ணு. பொதுப்பலன்: இந்தப் புத்தாண்டு உங்கள் ராசிக்கு என்ன நற்பலன்களை வாரி வழங்குகிறது என்று பார்ப்போம்.


ஜனவரி


இம்மாதத்தில் நீங்கள் செய்ய வேண்டிய காரியங்களை அலைச்சல், திரிசல், தடைகள், தாமதங்கள் போன்றவை இல்லாமல் ஓரளவு நிம்மதியாகச் செய்து முடிக்கலாம். மறதி, மந்தத்தனம், அலுப்பு, சலிப்பு, அவநம்பிக்கை, சந்தேகம் போன்றவை உங்களிடமிருந்து நீங்கி விடும். சஞ்சலம், சங்கடமும், சோம்பலும் பறந்தோடும். உங்கள் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். உங்களுடைய தோற்றத்திலும் ஓரளவு பொலிவு ஏற்படும். சுறுசுறுப்பாகக் காணப்படுவீர்கள். பரிகாரம்: தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது.

பிப்ரவரி


இம் மாதத்தில் பொருளாதார நிலையில் எப்போதும் பற்றாக்குறையாகவே இருக்கும். பற்றாக்குறை பிரச்சினை கொடுக்கல் வாங்கலில் குளறுபடிகள், கடுமையான பேச்சுவார்த்தைகள், வீணான வாக்குவாதங்கள், குடும்பத்தில் குறைபாடுகள், கோபதாபங்கள் மன நிம்மதி இழப்பீர்கள். சுமாரான மாதம் இது. இம்மாதத்தைப் பொறுத்தவரை மாத முற்பகுதி சராசரியாக இருக்கும். மாத பிற்பகுதியில் இருந்து உழைப்பின் சுமை கூடும். மனோதிடம் சற்று குறையும். பரிகாரம்: ஆஞ்சனேயர் வழிபாடு நல்லது.

மார்ச்


இம்மாதத்தில் உங்களைக் கவனித்துக் கொள்ள உங்களுக்கு நேரம் இருக்காது. அலைச்சல் காரணமாக நேரத்திற்குச் சாப்பிட முடியாது. உங்களுடைய ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உடலில் இரத்தக் காயம் ஏற்படலாம். நண்பர்களுடன் உரையாடும் போது கருத்து மோதல்கள் ஏற்பட்டால் வாக்குவாதம் செய்து கொண்டிராதீர்கள். பெருந்தன்மையாக விட்டுக் கொடுத்து விடுங்கள். தொழில், வேலை வாய்ப்பு, முதலீடு வகைகளில் சிறப்பு கவனம் செலுத்துவது நல்லது. பரிகாரம்: சிவன் வழிபாடு நல்லது.

ஏப்ரல்


இந்த மாதத்தில் யாருக்கும் கடன் கொடுத்து விடாதீர்கள். கடன் அன்பை முறிக்கும். போக்குவரத்துகள் எளிதாக இருக்காது. சில சிரமங்களைச் சந்திப்பீர்கள். வண்டி பழுது பார்த்தல், பராமரித்தல் போன்றவற்றிலும் சிரமங்கள் ஏற்படலாம். முன்னேற்றத்திற்கான வழி கிடைக்கும். அதுவரை பொறுமை தேவை. பரிகாரம்: தட்சிணாமூர்த்தி வழிபாடு நல்லது.

மே


இம்மாதத்தில் நீங்கள் எதிர்பார்க்கும் ஆதாயமும் வந்து சேரும். ஆனால் முழுமையாக வராது. அரை குறையாக வந்து சேரும். புத்துணர்ச்சி அதிகரிக்கும். சுறுசுறுப்பாக செயல்பட வைக்கும். ஒரு இடத்தில் நிலையாக இருக்க முடியாது. அவ்வப்பொழுது செயல்படும் காரியங்களில் தடையும் தாமதமும் வந்தாலும் முடிவு சாதகமாக இருக்கும். முயற்சிக்கு பலன் கிட்டும் மாதம் இது. பரிகாரம்: சிவன் கோவிலுக்குச் சென்று தீபம் ஏற்றி வழிபடவும்.

ஜூன்


இம்மாதத்தில் உடல் ஆரோக்கியத்தில் உள்ள குறைபாடுகள் நீங்கும். முன்னேற்றத்திற்கு தடையாக இருந்த முட்டுக்கட்டை விலகிக் கொள்ளும். சுற்று வட்டாரத்தில் உங்கள் முக்கியத்துவம் உணரப்படும். நேற்று வரை உங்களைப் பார்த்தும் பார்க்காதது போல் சென்றவர்கள் இன்று நெருங்கி வந்து நட்பு பாராட்டுவார்கள். பிரபலமாக விளங்கும் மனிதர்களில் சிலரும் தேடி வந்து உங்களிடம் நட்பு வைத்துக் கொள்வார்கள். உழைப்பின் பலன் வீண் போகாது. பரிகாரம்: அம்மன் வழிபாடு செய்வது நல்லது.

ஜூலை


இம்மாதத்தில் தொழில் வியாபாரத்தில் நிலவி வந்த மந்தமான போக்கு நீங்கும். கூட்டு வியாபாரத்தில் ஏற்பட்டிருந்த கருத்து வேற்றுமை அகலும். உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு வேலைப்பளு குறையும். கலைஞர்களுக்கு வருமானமும் நன்றாக இருக்கும். செலவுகளும் அதிகமாக ஏற்படும். குடும்பத்தில் ஏற்பட்டு வந்த சண்டை சச்சரவுகள் நீங்கும். சில குடும்பப் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ள மனைவியின் ஆலோசனைப்படி நடந்து கொள்வது நல்லது. பரிகாரம்: சிவன் வழிபாடு செய்து வரவும்.

ஆகஸ்ட்


இம்மாதத்தில் தொழில் வியாபாரத்தில் புதிதாகச் சில நெருக்கடிகள் தோன்றும். பொறுமையாகச் சமாளிக்க வேண்டும். இம்மாதத்தைப் பொறுத்த வரை கட€யை செய் பலனை எதிர்பார்க்காதே என்ற வரிக்கு ஏற்ப தாங்கள் செயல்பட வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றீர்கள். பரிகாரம்: சூரிய வழிபாடு செய்து வரவும்.

செப்டம்பர்


இம்மாதத்தில் தொழில் வியாபாரத்தில் முன்னேற்றமான போக்கு காணப்படும். உத்தியோகம் பார்ப்பவர்களின் கடின உழைப்புக்கும் நேர்மைக்கும் நல்ல பலன் கிட்டும். சிலருக்கு விரும்பும் வகையில் இடமாற்றம் ஏற்படலாம். தொழிலாளர்களுக்கு வருமானம் அதிகமாகும். குடும்பத்தில் உற்சாகமும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். நின்று போன திருமணம் பேச்சுவார்த்தை மீண்டும் தொடரும். நல்ல முடிவும் எடுக்கப்படும். திறமையை பன்மடங்கு வெளிப்படுத்துவீர்கள். பரிகாரம்: மஹா விஷ்ணு வழிபாடு நல்லது.

அக்டோபர்


இம்மாதத்தில் உங்களுக்கு ஏற்பட்டிருந்த பொருளாதார நெருக்கடிகள் படிப்படியாக அகலும். உங்களுக்குத் தேவைப்படும் உதவிகள் சற்று தாமதமாகக் கிடைக்கும். கொடுக்கல், வாங்கல் சரளமாக நடைபெறும். அடுத்தவர்களை நம்புவதை விட தன்னைத்தானே நம்பி செயல்படுவது நல்லது. பரிகாரம்: லட்சுமி நாராயண பூஜை செய்யவும்.

நவம்பர்


இம்மாதத்தில் உங்கள் கைக்கு பணம் வந்து கொண்டே இருக்கும். நீங்களும் செலவழித்துக் கொண்டே இருப்பீர்கள். கொடுக்கல் வாங்கலில் சில குளறுபடிகள் ஏற்படலாம். முடிந்தவரை நீங்களும் பணம் கடன் வாங்காதீர்கள். கடன் கொடுக்கவும் செய்யாதீர்கள். சுமாரான பலன் தரும் மாதம் இது. பரிகாரம்: அம்மன் வழிபாடு நல்லது.

டிசம்பர்


இம்மாதத்தைப் பொறுத்த வரை படிப்படியாக முன்னேற்றப் பாதைக்கு வழி காண இருக்கின்றீர்கள். குடும்பத்தில் உற்சாகமான போக்கு காணப்படும். மாணவ, மாணவிகள் பணத்தை உற்சாகமாக செலவழித்து விட்டு தேர்வுக்குப் பணம் கட்ட முடியாமல் தடுமாறலாம். சிலர் குடும்பத்துடன் உல்லாசப் பயணம் சென்று வருவார்கள். பிள்ளைகள் பெருமை சேர்க்கும் விதத்தில் நடந்து கொள்வார்கள். பரிகாரம்: சிவன் வழிபாடு செய்து வரவும்.

0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India