2012 - ம் வருட ராசிபலன்


வெற்றிக்கு தன் உழைப்பையும் அறிவையும் மூலதனமாக கொண்டு செயல்படும் சிம்ம ராசி நேயர்களே! பெருந்தன்மைக்கு இருப்பிடமாக விளங்கும் நீங்கள் வெற்றி என்னும் இலக்கினை அடையும் வரை கடுமையாக உழைக்கும் குணம் உடையவர்கள். அவ்வப்போது தலைகாட்டும் கோபத்தைக் குறைத்துக் கொண்டால் அதிக நன்மைகள் உங்கள் பக்கம் அணி வகுத்து நிற்கும். சூரியனை தன் ராசி நாதனாகக் கொண்ட இவர்கள் பொது வாழ்வில் அதிக ஆர்வத்துடன் ஈடுபடுவதோடு மற்றவர்களுக்கு சிறந்த வழிகாட்டியாகவும் விளங்குவார்கள். இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு ஆன்மீக நாட்டமும் உண்டு. தன் திறமை மேல் நம்பிக்கை வைத்து செயலாற்றும் இவர்கள் மற்றவர்களோடு சற்று அனுசரித்து நடந்து கொள்ள முதலில் சிறிது சிரமப்பட்டாலும் பின்னர் வெகு விரைவில் தோழமை உணர்வோடு நடந்து கொள்வார்கள். கருணை குணமும், குழந்தை மணமும் கொண்ட இவர்கள் பல விஷயங்களில் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். மகம் நட்சத்திரக்காரர்களுக்கு வேதை(ஆகாதது) - ரேவதி நட்சத்திரம், திருமணம் செய்ய தொழில் கூட்டு சேர்க்கவும் பொருந்தாத நட்சத்திரங்கள் 6. அவைகள் - ஆயில்யம், மகம், கேட்டை, மூலம், ரேவதி. அதிர்ஷ்ட மலர் - செவ்வல்லி. அனுகூல தெய்வம் - இந்திரன். அதிர்ஷ்டக் கல் - வைடூரியம். அதிர்ஷ்ட நிறம் - கரும்பச்சை. அதிர்ஷ்ட எண் - 10. பூரம் நட்சத்திரக்காரர்களுக்கு வேதை(ஆகாதது) பூராடம் நட்சத்திரம். திருமணம் செய்ய தொழில் கூட்டு சேர்க்கவும் பொருந்தாத நட்சத்திரங்கள் 6. அவைகள் - பரணி, பூசம், பூரம், அனுஷம், பூராடம், உத்திரட்டாதி. அதிர்ஷ்ட மலர் - செந்தாமரை. அனுகூல தெய்வம் - சிவபெருமான். அதிர்ஷ்டக் கல் - வைரம். அதிர்ஷ்ட நிறம் - வெளிர் நீலம். அதிர்ஷ்ட எண் - 11. உத்திரம் நட்சத்திரக்காரர்களுக்கு வேதை(ஆகாதது) - உத்திரட்டாதி நட்சத்திரம். திருமணம் செய்ய தொழில் கூட்டு சேர்க்கவும் பொருந்தாத நட்சத்திரங்கள் 6. அவைகள் கார்த்திகை, புனர்பூசம், உத்திரம், விசாகம், உத்திராடம், பூரட்டாதி. அதிர்ஷ்ட மலர் - செந்தாமரை. அதிர்ஷ்டக் கல் - வைரம். அதிர்ஷ்ட நிறம் - சிவப்பு. அதிர்ஷ்ட எண் - 12. அனுகூல தெய்வம் - லட்சுமி. உங்களுடைய ஆதிக்கக் கிரகம்: சூரியன். அதிர்ஷ்ட மலர் - மந்தாரை. அதிர்ஷ்டக் கல் - மாணிக்கம். அதிர்ஷ்ட நிறம் - சிவப்பு. அதிர்ஷ்ட திசை - கிழக்கு. அதிர்ஷ்ட எண் - 1. நீங்கள் வழிபட வேண்டிய தெய்வம் - சிவபெருமான். பொதுப்பலன்: புத்தாண்டு 2012 உங்களுக்கு என்ன வளங்களை கொண்டு வருகிறது என்று பார்ப்போம்.


ஜனவரி


உங்களுடைய உழைப்பை உபயோகமான வழியில் செலுத்த உங்கள் அறிவு ஒத்துழைக்கும். வருமானத்திற்கு ஆதாரமான அனைத்துச் செயல்களிலும் தீவிரம் காட்டுவீர்கள். புத்திசாலித்தனத்தை பயன்படுத்துவீர்கள். வறுமைப் பிடிகள் தளரும். சிறுமைகளும், வாட்டங்களும் நீங்கும். வளமை நிறைந்த பல வசதிகள் வாய்ப்புகள் வந்து சேரும். சுகபோகங்களும் மகிழ்ச்சிகளும் சௌகரியங்களும் இனி ஒவ்வொன்றாக அபிவிருத்தி ஆகிக்கொண்டிருக்கும். பரிகாரம்: தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்யவும்.

பிப்ரவரி


இம்மாதத்தில் உங்களுடைய ஆரோக்கியம் அபிவிருத்தி அடையும். நோய் நொடிகள் ஏற்பட்டாலும் உடனுக்குடன் குணமாகும். உள்ளத்திலும் ஊக்கமும் உறுதியும் ஏற்பட்டு எழுச்சியும் செயல்படுவீர்கள். உங்களுடைய முயற்சியின் வேகம் அதிகப்படும். செயலில் தீவிரம் கூடும். உழைக்கும் ஆற்றல் அதிகமாகப் பெறுவீர்கள். உங்கள் கடின உழைப்பு பல சாதனைகளைச் செய்ய வைக்கும். பரிகாரம்: அனுமன் வழிபாடு செய்து வரவும்.

மார்ச்


இம்மாதத்தில் தொழில் வியாபாரம் அமோகமாக நடைபெற்று ஏராளமாக லாபம் கிட்டும். உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு சம்பள உயர்வு அல்லது பதவி உயர்வு ஏற்படும். கலைஞர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தி வருமானத்தைப் பெருக்கி கொள்வார்கள். குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே நிலவி வந்த கருத்துவேறுபாடு நீங்கும். புத்திர, புத்திரிகளுக்கும் அபிவிருத்திகள் ஏற்படும். திருமணமாகாமல் இருப்பவர்களுக்கு இந்தக் காலக் கட்டத்தில் திருமணம் நிச்சயமாகும். பரிகாரம்: சூரிய வழிபாடு செய்து வரவும்.

ஏப்ரல்


இம்மாதத்தில் போட்டிகளும் பொறாமைகளும் தலை தூக்க முடியாமல் தரையோடு தரையாக அமுங்கிப் போகும். பகை விவகாரம், வம்பு, வழக்கு போன்றவை முறியடிக்கப்படும். கடமைகளையும், காரியங்களையும் சிறப்பாக நிறைவேற்றி உங்கள் முக்கியத்துவத்தை உணரச் செய்வீர்கள். பல சாதனைகள் புரிந்து உங்கள் செல்வாக்கை உயர்த்திக் கொள்வீர்கள். பரிகாரம்: சிவன் வழிபாடு செய்து வரவும்.

மே


இந்த மாதத்தில் இனி எல்லாவற்றிலும் தெளிவாகச் சிந்திப்பீர்கள். தயக்கமில்லாமல் நல்ல முடிவுகளை எடுப்பீர்கள். அலைபாயும் மனதை ஒரே இடத்தில நிலை நிறுத்தி நீங்கள் செய்ய வேண்டிய காரியங்களை எளிதாகவும் வெற்றிகரமாகவும் செய்து முடிப்பீர்கள். இப்படித்தான் இருக்கும். அப்படித்தான் இருக்கும் என்று ஊகமாகச் சிந்தித்து மண்டையைப் போட்டுக் குழப்பிக் கொண்டிருக்க மாட்டீர்கள். மனதில் எப்போதும் நம்பிக்கை நிறைந்திருக்கும். பரிகாரம்: செவ்வாய்கிழமைகளில் முருகனை வழிபடவும்.

ஜூன்


இந்த மாதத்தில் வேதனைகளும் சோதனைகளும் நீங்கிச் சாதனை பல புரிந்து புகழ் பெறுவீர்கள். வழக்கு விவகாரங்களில் சாதகமான போக்கு காணப்படும். வம்புச் சண்டைக்கு வருபவர்கள் முறியடிக்கப்படுவார்கள். தாராளமாகத்தான் தருமங்கள் கைங்கரியங்கள் செய்வீர்கள். தைரியமும் தெம்பும் அதிகமாகும். தகப்பனாரின் ஆரோக்கியம் சீராக இருக்கும். உங்களுடைய ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும். உங்கள் மனைவியின் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும். பரிகாரம்: அம்மன் வழிபாடு செய்யவும்.

ஜூலை


இம்மாதத்தில் உங்களுக்குப் பொருளாதார நெருக்கடிகள் ஏற்படும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாமல் போகும். குடும்பத்தில் சிறுசிறு குழப்பங்கள் தலை தூக்கும். இம்மாதத்தைப் பொறுத்தவரை மாத பிற்பகுதியில் வெளியூர் பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். பரிகாரம்: சிவன் வழிபாடு செய்வது நல்லது.

ஆகஸ்ட்


இம்மாதத்தில் தொழில் வியாபாரத்தில் புதிய உத்திகளைக் கடைப்பிடித்தால் விற்பனை அதிகரிக்கும். உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு வேலைப் பளு குறையும். அலுவலகத்தில் சில சலுகைகள் கிடைக்கும். தொழிலாளர்களின் வருமானம் பெருகும். இடமாற்றம் ஏற்படும். பரிகாரம்: சூரிய வழிபாடு செய்து வரவும்.

செப்டம்பர்


உங்களுடைய பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். கையில் பணம் இருக்கும் போது நகை நட்டு என்று வாங்கிப் போடுங்கள். கையில் அதிகமாக பணம் சேர்ந்தால் வீடு, நிலம் போன்றவற்றை வாங்கும் முயற்சியில் தீவிரமாக இறங்குங்கள். எந்தக் காரியமாக இருந்தாலும் திட்டம் போடாமல் செய்ய மாட்டீர்கள். நன்கு திட்டமிட்டுச் செயல்படுவதால் பல வெற்றிகளை எளிதாகத் தேடிக் கொள்ள முடியும். பரிகாரம்: மகா விஷ்ணு வழிபாடு நல்லது.

அக்டோபர்


இம்மாதத்தில் கருத்து வேறுபாடு காரணமாக விலகிச் சென்றவர்கள் இப்போது நெருங்கி வந்து நட்பு பாராட்டுவார்கள். ஆரோக்கியம் சீராக இருக்கும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும். அதனால் நோய்கள் வந்தால் உடனுக்குடன் குணமாகி விடும். அடுத்தவர்களை நம்புவதை விட தன்னைத் தானே நம்பி செயல்படுவது நல்லது. பரிகாரம்: லட்சுமி நாராயண பூஜை செய்யவும்.

நவம்பர்


இம்மாதத்தில் தொடர்ந்து பல வெற்றிகளைப் பெற்றாலும் சில தோல்விகளையும் சந்திக்கக் கூடிய சூழ்நிலை உருவாகும். அந்தத் தோல்விகளுக்கு உங்கள் கவனக் குறைவு தான் காரணமாக இருக்கும். வெளியூர்ப் பயணங்களை முடிந்த அளவு தள்ளிப் போடுவது நல்லது. நண்பர்களுடன் பேசும் போது வாக்குவாதம் ஏற்படாமல் பார்த்துக் கொள்வது நல்லது. பரிகாரம்: லட்சுமி நரசிம்மர் வழிபாடு நல்லது.

டிசம்பர்


இந்த மாதத்தில் முட்டுக்கட்டைகளாக எந்த விவகாரங்கள் குறுக்கிட்டாலும் அவற்றையெல்லாம் தாண்டிக் கொண்டு முன்னே செல்வீர்கள். ஆக்கப்பூர்வமான காரியங்களையும் அவசியமான கடமைகளையும் அடுத்தடுத்துச் செயல்படுத்திக் கொண்டு வருவீர்கள். நிதானித்து செயல்படுங்கள். மேன்மைக்கு வழி கிடைக்கும் மாதம் இது. பரிகாரம்: தட்சிணாமூர்த்தி வழிபாடு நல்லது.

0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India