2012 - ம் வருட ராசிபலன்


இளகிய மனமும் குழந்தை உள்ளமும் உடைய மீன ராசி நேயர்களே! உங்களுடைய இனிமையான பேச்சால் தனக்கென்று ஒரு நட்பு வட்டாரத்தை உருவாக்கிக் கொள்ளும் வல்லமை படைத்தவர்களாக விளங்குவீர்கள். உங்களுடைய தன்னம்பிக்கையான போக்கில் கவனமாக இருக்கும், நீங்கள் அவ்வப்போது உடல் ஆரோக்கியத்தையும் கவனித்துக் கொண்டால், பொது சேவையில் மேலும் ஆர்வத்துடன் ஈடுபட முடியும். குருவைத் தன் ராசி நாதனாகக் கொண்ட இவர்கள் ஆன்மீகம், நுண்ணறிவைப் பயன்படுத்தி கல்வி பெறக் கூடிய துறை ஆகியவற்றில் தனித்து விளங்குவார்கள். அத்துடன் தன் திறமை மற்றும் பேச்சுத் திறமை ஆகிய இரண்டையும் மூலதனமாக வைத்து கடுமையான பணிகளையும் சுணக்கமின்றி செய்து முடித்திடும் சாமர்த்தியம் உடையவர்களாக இருப்பார்கள். பூரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு வேதை(ஆகாதது) உத்திரம், திருமணம் செய்யவும், தொழில் கூட்டு சேர்க்கவும் பொருந்தாத நட்சத்திரங்கள் 6. அவைகள் - கார்த்திகை, புனர்பூசம், உத்திரம், விசாகம், உத்திராடம். பூரட்டாதி. அதிர்ஷ்ட மலர் - முல்லை. அதிர்ஷ்டக் கல் - கனக புஷ்பராகம். அதிர்ஷ்ட நிறம் - மஞ்சள். அதிர்ஷ்ட எண்கள் - 7, 16, 25. அனுகூல தெய்வம் - பிரம்மா. உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு வேதை(ஆகாதது) பூரம் நட்சத்திரம். திருமணம் செய்ய தொழில் கூட்டு சேர்க்கவும் பொருந்தாத நட்சத்திரங்கள் 6. அவைகள் பூசம், பரணி, பூரம், அனுஷம், பூராடம், உத்திரட்டாதி. அதிர்ஷ்ட மலர் - கருங்குவளை. அனுகூலத் தெய்வம் - சனீஸ்வரன். அதிர்ஷ்டக் கல் - நீலக்கல். அதிர்ஷ்ட நிறம் - கருநீலம். அதிர்ஷ்ட எண்கள் - 8, 17, 26. ரேவதி நட்சத்திரக்காரர்களுக்கு வேதை(ஆகாதது) மகம் நட்சத்திரம். திருமணம் செய்ய தொழில் கூட்டு சேர்க்கவும் பொருந்தாத நட்சத்திரங்கள் 6. அவைகள் அசுவினி, ஆயில்யம், மகம், மூலம், கேட்டை, ரேவதி. அதிர்ஷ்ட மலர் - முல்லை. அனுகூல தெய்வம் - மகா விஷ்ணு. அதிர்ஷ்டக் கல் - புஷ்பராகம். அதிர்ஷ்ட நிறம் - மஞ்சள். அதிர்ஷ்ட எண்கள் - 9, 18, 27. மீனம் உரிய ஆதிக்கக் கிரகம் - குரு. அதிர்ஷ்ட மலர் - வெண்காந்தள். அதிர்ஷ்டக் கல் - மரகதம். அதிர்ஷ்ட நிறம் - பச்சை. அதிர்ஷ்ட திசை - வடகிழக்கு. அதிர்ஷ்ட எண் - 3. நீங்கள் வணங்க வேண்டிய தெய்வம் - பிரம்மா. பொதுப்பலன்கள்: இந்த புத்தாண்டு 2012 உங்கள் ராசிக்கு எப்படி மலர்கிறது என்று பார்ப்போம்.

ஜனவரி
புத்தாண்டின் முதல் மாதம் இனிமை நிறைந்ததாக இருக்கும். குடும்பத்தில் உற்சாகமும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். தடைப்பட்டு வந்த திருமண சுபகாரியங்கள் கை கூடி மகிழ்ச்சியளிக்கும். புத்திர பாக்கியமும் சிலருக்கு அமையும். பெண்களுக்கு சரியான நல்ல காலம். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும். மணமாகாதவர்களுக்கு நல்ல வரன் அமையும். பரிகாரம்: முருகன் வழிபாடு நல்லது.
பிப்ரவரி
இம்மாதத்தில் வேலை தேடி அலைபவர்களுக்கு எளிதாக வேலை கிடைத்து விடாது. நிறைய அலைய வேண்டும். அப்படியே வேலை கிடைத்தாலும் அது நல்ல ஊதியத்தை தரும் வேலையாக இருக்காது. புதிதாகத் தொழில் அல்லது வியாபாரம் தொடங்க ஆசைப்படுபவர்களுக்கு தாமதமாகவே அதற்கான வாய்ப்பு கிடைக்கும். தொழில் அல்லது வியாபாரத்தை தொடங்கி விட்டாலும் தொடக்கத்தில் மந்தமான போக்கே காணப்படும். உழைப்பு எதுவாக இருந்தாலும் அதில் தடைகளும், தடங்கல்களும் ஏற்படும். பரிகாரம்; சிவன் வழிபாடு செய்யவும்.
மார்ச்
இம் மாதத்தில் சொந்தமாகத் தொழில் அல்லது வியாபாரம் செய்து கொண்டிருப்பவர்கள் புதிது புதிதாக நெருக்கடிகளைச் சந்திப்பார்கள். கவனமாக இல்லாவிட்டால் பெரும் நஷ்டம் ஏற்பட்டு விடும். இம்மாதத்தைப் பொறுத்தவரை எந்தவிதமான சூழ்நிலையையும் அசாத்தியமான துணிச்சலுடன் எதிர் கொள்வீர்கள். தற்போதைக்கு உமது எண்ணங்கள் செயல்கள் அனைத்தும் நெருங்கியவர்களின் குறைகளைத் தீர்த்து வைத்து அதில் சந்தோஷம் அடையும் நிலையிலேயே இருப்பீர்கள். பரிகாரம்: சிவன் சன்னதியில் தீபம் ஏற்றி வழிபடுங்கள்.
ஏப்ரல்
இம்மாதத்தில் உங்களுடைய பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்காது. நீங்கள் இலட்சக்கணக்கில் சம்பாதிப்பவராக இருந்தாலும் இந்தக்காலக் கட்டத்தில் கடுமையான பொருளாதார நெருக்கடிகளைச் சந்தித்துதான் தீர வேண்டும். கொடுக்கல், வாங்கலில் குளறுபடிகளும் சிக்கல்களும் ஏற்படும். எப்போதோ வாங்கிய கடன் இப்போது வந்து தொல்லைப்படுத்தலாம். காரியத் தடைகள், கடுமையான வாக்கு வாதங்களால் ஏற்படும் கை கலப்புகள், வம்புச் சண்டைகள், அடிதடிகள் போன்றவற்றை நீங்கள் சந்திக்க நேரிடும். குடும்பத்தில் எப்போதும் சண்டைச் சச்சரவுகளும் கருத்து வேறுபாடுகளும் காணப்படும். பிள்ளைகளின் முன்னேற்றத்தில் தடைகளும் தாமதங்களும் ஏற்படும். பரிகாரம்: சூரிய வழிபாடு செய்யவும்.
மே
இம் மாதத்தில் தொழில், வியாபாரத்தில் பெரிய முன்னேற்றத்தை எதிர்பார்க்க வேண்டாம். உத்தியோகம் பார்ப்பவர்கள் மேலதிகாரிகளை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. கலைஞர்கள் அதிக முயற்சியின் பேரிலேயே வாய்ப்புகளை பெற முடியும். குடும்பத்தில் சிறு சிறு பிரச்சினைகள் தலை தூக்கினாலும் பெரிய பாதிப்பு ஏற்படாது. குடும்பச் செலவு மிக அதிகமாக இருக்கும். சுபச் செலவும் ஏற்படும். பரிகாரம்: செவ்வாய் கிழமைகளில் முருகன் வழிபாடு செய்யவும்.
ஜூன்
இம்மாதத்தைப் பொறுத்தவரை உங்களுடைய பொருளாதார நிலை திருப்திகரமாக இராது. உங்களுக்கு வரவேண்டிய பணம் மொத்தமாக வராது. சிறிது சிறிதாக வரும். அதனால் அதை உருப்படியாகச் செலவு பண்ண முடியாமல் போகும். கொடுக்கல், வாங்கலில் குளறுபடிகள் குதர்க்கம் போன்றவை காணப்படும். வருமானம் தொடர்பான செலவுகளில் தடைகளும் தாமதங்களும் ஏற்படும். இம்மாதத்தைப் பொறுத்தவரை பெரிய திட்டங்களை செயல்படுத்துவது என்பது ஆகாத காரியமாக இருக்கும். குறைந்தது மாத முற்பகுதி முடியும் வரையாவது பொறுமை காக்க வேண்டும். அதற்கு பிறகு தான் ஒரு சில ஆதாயங்களாவது கை கூடும். பரிகாரம்: அம்மன் வழிபாடு நல்லது.
ஜூலை
இம்மாதத்தில் நீங்கள் எந்தக் காரியத்தைச் செய்வதாக இருந்தாலும் அதை எளிதாகச் செய்து முடித்து விட முடியாது. அதற்குத் தீவிர முயற்சி தேவைப்படும். நேற்று வரை உங்களுடன் சுற்றிக் கொண்டிருந்தவர்கள் இன்று விலகிச் சென்று உங்களைப் பற்றி தப்பாகப் பேசுவார்கள். தூற்றவும் செய்வார்கள். பொன்னோ, பொருளோ வைத்த இடத்தை மறந்து விட்டு தேட வேண்டி வரும். எனவே முக்கிய பொருட்களை கையாளும் பொழுது மறதி ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ளவும். பரிகாரம்: வெள்ளிக்கிழமைகளில் அம்மன் வழிபாடு செய்யவும்.
ஆகஸ்ட்
இம்மாதத்தில் தொழில், வியாபாரத்தில் மந்தமான போக்கு காணப்படும். உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகமாக இருக்கும். தொழிலாளர்கள் சம்பள உயர்வுக்காகத் தொடர்ந்து போராட வேண்டியிருக்கும். குறிப்பாக வெளி இடங்களுக்கோ வெளியூர் பயணங்களிலோ முன்பின் தெரியாத வரை நம்பி எந்தவிதமான செயலிலும் ஈடுபட வேண்டாம். பரிகாரம்: தினமும் கணபதி வழிபாடு செய்யவும்.
செப்டம்பர்
இம் மாதத்தைப் பொறுத்தவரை குடும்பத்தில் மாத முற்பகுதியில் கணவரிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்பு இருக்கின்றது. குடும்பத்தில் தாயார் அல்லது மனைவியால் சில பிரச்சினைகள் ஏற்படும். போதாக்குறைக்கு உறவினர்களும் வந்து குழப்பத்தை ஏற்படுத்துவார்கள். முடிந்தவரை அனுசரித்து சென்றால் தேவையற்ற பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம். மாத பிற்பகுதிக்கு மேல் சிக்கல்கள் நீங்கி சுமூகமான உறவுகள் மலரும். பரிகாரம்: தாயார் சன்னதியில் தீபம் ஏற்றி வழிபடவும்.
அக்டோபர்
இம்மாதத்தில் உங்களுக்கும் உங்கள் மனைவிக்குமிடையே கருத்து வேறுபாடு, வாக்குவாதம் போன்றவை ஏற்படலாம். உங்கள் மனைவிக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டு குணமாகும். குடும்பத்தில் எல்லோரும் முறுக்கிக் கொண்டு திரிவார்கள். நீங்கள்தான் பொறுமையாக நடந்து கொண்டு, அவர்களுடைய பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும். தேவையற்ற மன உளைச்சலால் உடல் நலனில் குறைபாடு உண்டாகவும் வாய்ப்பு உள்ளது. பரிகாரம்: தினமும் கணபதி வழிபாடு செய்யவும்.
நவம்பர்
இம்மாதத்தில் உங்களுடைய பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்காது. கைக்கு வரவேண்டிய பணம் குறைவாகவும், செலவு அதிகமாகவும் இருக்கும். கடன்கள் தொல்லை கொடுக்கும். கொடுக்கல், வாங்கலில் குளறுபடி உண்டாகும். கடமைகளை நிறைவேற்றுவதிலும் பொறுப்புகளை நிறைவேற்றுவதிலும் தடைகளும், தாமதங்களும் ஏற்படும். வேலைகள் ஏராளமாக இருக்கும். ஆனால் எந்த வேலையையும் செய்ய உடல் நிலை இடம் கொடுக்காது. அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் முன்னுரிமை அளிக்கவும். பரிகாரம்: சங்கடஹர சதுர்த்தி விரதம் இருந்து விநாயகரை வழிபடவும்.
டிசம்பர்
இம்மாதத்தில் வெளியூர்ப் பயணங்களை முடிந்த வரை தள்ளிப் போடுவது நல்லது. மற்றவர்களுக்கு அறிவுரை வழங்குவது, மற்றவர்களுடைய விவகாரங்களில் மூக்கை நுழைப்பதும் இப்போது வேண்டாம். முக்கிய பிரமுகர்களைச் சந்திக்க முயற்சி செய்வீர்கள். நாலைந்து முறை அலைந்த பிறகே அவர்களைச் சந்திக்க முடியும். தொழில், வியாபாரத்தில் புதிய உத்திகளைப் புகுத்த வேண்டிய அவசியம் உண்டாகும். உத்தியோகம் பார்ப்பவர்கள் சக ஊழியர்களை அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும். கலைஞர்களுக்கு வருமானம் நன்றாக இருக்கும். செலவுகளும் அதிகமாக ஏற்படும். குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே நெருக்கமான உறவு காணப்படும். புத்திர, புத்திரிகளின் முன்னேற்றத்தில் தடைகளும், தாமதங்களும் ஏற்படும். பரிகாரம்: துர்க்கை வழிபாடு செய்யுங்கள்.

0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India