2012 - ம் வருட ராசிபலன்


உயர்ந்த குணமும் உதவும் மனப்பான்மையும் கொண்ட துலா ராசி நேயர்களே! முக்கிய பணிகளுக்கு முதலிடம் கொடுத்து காரியங்களை சாதித்துக் கொள்ளும் இயல்புடைய நீங்கள் நட்புக்கு என்று தனி இடம் ஒதுக்குவீர்கள். நீங்கள் அதிகம் செய்யும் செலவுகளால் உங்கள் வாழ்வில் சில தொல்லைகள் இருந்தாலும் உங்கள் திறமையால் அனைத்தையும் சமாளித்து விடுவீர்கள். சுக்ரனை தன் ராசி நாதனாகக் கொண்ட நீங்கள், பொது வாழ்வில் அதிக ஈடுபாடுடன் இறங்கி சாதனை செய்ய விரும்புவீர்கள். நல்ல திறமை எங்கிருந்தாலும் அதனைக் கண்டறிந்து அதனைப் பாராட்டும் உயர்ந்த குணம் உங்களுக்கு உண்டு. புகழ்ச்சியான வார்த்தைகளுக்கு அதிகம் மயங்காமல் இருந்தால் வாழ்வில் நல்ல முன்னேற்றம் காணலாம். சித்திரை நட்சத்திரக்காரர்களுக்கு வேதை(ஆகாதது) மிருகசீரிடம், திருமணம் செய்யவும், தொழில் கூட்டுச் சேர்க்கவும் பொருந்தாத நட்சத்திரங்கள் மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம் நட்சத்திரம் இந்த 3 நட்சத்திரங்கள் கூடாது. (ஏக ரச்சு) மற்றவர்களுக்கு எல்லாம் 6 நட்சத்திரங்கள் ஆகாதவையாக வரும் போது உங்களுக்கு மட்டும் 3 நட்சத்திரங்கள் ஆகாதவை என்பது சிறப்பு தானே. அதிர்ஷ்ட மலர் - செண்பகப்பூ. அதிர்ஷ்டக் கல் - பவளம். அனுகூலத் தெய்வம் - சுப்பிரமணியர். அதிர்ஷ்ட நிறம் - சிவப்பு. அதிர்ஷ்ட எண் - 5, 14. சுவாதி நட்சத்திரக்காரர்களுக்கு வேதை(ஆகாதது) ரோகிணி நட்சத்திரம். திருமணம் செய்ய தொழில் கூட்டு சேர்க்கவும். பொருந்தாத நட்சத்திரங்கள் 6. அவைகள் ரோகிணி, திருவாதிரை, உத்திரம், சுவாதி, திருவோணம், சதயம். அதிர்ஷ்ட மலர் - மந்தாரை. அனுகூல தெய்வம் - காளி மாதா. அதிர்ஷ்டக் கல் - கோமேதகம். அதிர்ஷ்ட நிறம் - கறுப்பு. அதிர்ஷ்ட எண்கள் - 6, 15. விசாகம் நட்சத்திரக்காரர்களுக்கு வேதை(ஆகாதது) கார்த்திகை. திருமணம் செய்ய தொழில் கூட்டு சேர்க்கவும் பொருந்தாத நட்சத்திரங்கள் பரணி, கார்த்திகை, விசாகம். அதிர்ஷ்ட மலர் - முல்லை. அனுகூல தெய்வம் - பிரம்மா. அதிர்ஷ்டக் கல் - கனக புஷ்பராகம். அதிர்ஷ்ட நிறம் - மஞ்சள். அதிர்ஷ்ட எண் - 7, 16. துலாம் உங்களுடைய ஆதிக்கக் கிரகம் - சுக்ரன். அதிர்ஷ்ட மலர் - வெண் தாமரை. அதிர்ஷ்டக் கல் - வைரம். அதிர்ஷ்ட நிறம் - வெள்ளை. அதிர்ஷ்ட திசை - தென் கிழக்கு. அதிர்ஷ்ட எண் - 6. நீங்கள் வணங்க வேண்டிய தெய்வம் - லட்சுமி. பொதுப்பலன்: 2012 புத்தாண்டு உங்களுக்கு எப்படி மலர்கிறது என்று பார்ப்போம்.


ஜனவரி


இம்மாதத்தில் பணவரவு ஓரளவு திருப்திகரமாக இருக்கும். பேச்சுவார்த்தைகள் சுமூகமாக நடைபெறும். சில ஆதாயங்களையும் தேடிக் கொள்ள முடியும். குடும்ப நிலவரம் ஓரளவு திருப்திகரமாக இருக்கும். குடும்பச் செலவுகளைச் சமாளிப்பதில் சிரமம் இருக்காது. தகப்பனாரின் ஆரோக்கியம் சீராக இருக்கும். பரிகாரம்: அனுமன் வழிபாடு நல்லது.

பிப்ரவரி


இம்மாதத்தில் பணவரவு சீராக இருக்கும். எல்லாவகையான செலவுகளையும் சமாளிக்கும் அளவிற்கு வருமானம் வரும். குடும்பத்தில் சிறுசிறு பூசல்கள் தலை தூக்கும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் கோபப்படாதீர்கள். பிரச்சினைகள் ஏற்படும் போது நீங்கள் அவர்களுக்கே ஆறுதலும் சொல்ல வேண்டும். தைரியப்படுத்தவும் வேண்டும். பரிகாரம்: சிவன் வழிபாடு நல்லது.

மார்ச்


இம்மாதத்தில் வெளிவட்டாரச் சூழ்நிலை பெரும்பாலும் உங்களுக்குச் சாதகமாக இருக்காது. உங்கள் காரியங்களைச் செய்து முடிப்பதில் தடைகள், தடங்கல் போன்றவை ஏற்படும். எல்லாவற்றையும் பொறுமையாகத்தான் சமாளிக்க வேண்டும். பணவரவு சீராக இருக்கும். எல்லா வகையான செலவுகளையும் சமாளிக்கும் அளவிற்கு வருமானம் வரும். குடும்பத்தில் சிறுசிறு பூசல்கள் தலை தூக்கும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் கோபப்படாதீர்கள். பிரச்சினைகள் ஏற்படும் போது நீங்கள் அவர்களுக்கே ஆறுதலும் சொல்ல வேண்டும்; தைரியப்படுத்தவும் வேண்டும். பரிகாரம்: அம்மன் வழிபாடு நல்லது.

ஏப்ரல்


இந்த மாதத்தில் உங்கள் ஆரோக்கியம் சீராகவே இருக்காது. அடிக்கடி நோய் நொடிகள் வந்து தொல்லைப்படுத்தும். நீங்களும் எல்லாவற்றையும் சமாளித்துக் கொண்டு உங்கள் வேலைகளைச் செய்து முடிப்பீர்கள். ஒரு காரியத்தை எடுத்துக்கொண்டால் அதை உடனே செய்து முடிக்க வேண்டும் என்று தோன்றாது. சாவகாசமாகச் செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்கத் தொடங்கி விடுவீர்கள். பரிகாரம்: அம்மனுக்கு தீபம் ஏற்றி வழிபடவும்.

மே


இம்மாதத்தில் உங்களுடைய உடல் சக்தி குறைந்து விட்டது போன்ற உணர்வு ஏற்படும். நோய் எதிர்ப்பு சக்தியும் சற்றுக் குறையும். தைரிய உணர்ச்சி குன்றும். உந்து சக்தியும் குறையும். நோய் எதிர்ப்பு சக்தி குறைவதால் அடிக்கடி நோய்கள் ஓடி வந்து உறவு கொண்டாடும். தைரிய உணர்ச்சி குன்றுவதால் எதிர்த்து நிற்க வேண்டிய நேரத்தில்கூடப் பணிந்து சென்று விடுவீர்கள். உந்து சக்தி குறைவதால் உங்களுடைய செயல்பாடுகளில் வேகம் இருக்காது. சுமாரான பலன் தரும் மாதம் இது. பரிகாரம்: விஷ்ணு துர்க்கையை வழிபாடு செய்யவும்.

ஜூன்


இம்மாதத்தில் மனைவியின் ஆரோக்கியம் அடிக்கடி பாதிக்கப்படும். கணவன், மனைவிக்குள் கருத்து வேற்றுமை தலை தூக்கும். வீட்டு நிர்வாகம் தொடர்பாக வாக்கு வாதம் உண்டாகும். திருமணப் பேச்சு வார்த்தைகள் இழுத்துக்கொண்டே போகும். அதிகப்படியான உழைப்பு காரணமாக கணவன் அல்லது மனைவி அடிக்கடி சோர்ந்து போகக் கூடும். கணவன், மனைவிக்கிடையே சிறு பிரிவு ஏற்படவும் வாய்ப்பு உண்டு. பரிகாரம்: கணபதி வழிபாடு செய்வது நல்லது.

ஜூலை


இம்மாதத்தில் உங்களுடைய பொருளாதார நிலை பிரமாதமாக இருக்கும் என்று சொல்ல முடியாவிட்டாலும் மோசமாக இருக்காது. இந்தக் காலக்கட்டத்தில் உங்களுக்கு ஏதேதோ செலவுகள் ஏற்படும். ஆனால் எல்லாவற்றையும் சமாளிக்கும் அளவுக்கு எங்கிருந்தாவது பணம் கைக்கு வந்து சேர்ந்து விடும். அதிக அலைச்சல், கடின உழைப்பு, தூக்கமின்மை போன்றவை காரணமாக ஆரோக்கியம் பாதிக்கப்படும். பரிகாரம்: சதுர்த்தி விரதம் இருந்து கணபதி வழிபாடு செய்யவும்.

ஆகஸ்ட்


இந்த மாதத்தில் வெற்றியை மட்டுமே எதிர்பார்க்க கூடாது. தோல்வியையும் சேர்த்தே எதிர்பார்க்க வேண்டும். அதாவது தோல்வியும் ஏற்படலாம் என்ற எண்ணம் மனதின் ஓரத்தில் இருக்க வேண்டியது அவசியம். பண வரவு திருப்திகரமாக இருந்தாலும் கொடுக்கல் வாங்கலில் குழப்பமும், குளறுபடிகளும் காணப்படும். நீங்கள் நினைப்பது போல் எதுவும் நடக்காது. நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அதற்கு நேர்மாறாக நடக்கும். சில ஏமாற்றங்களைச் சந்திக்க நேர்ந்தாலும் அதனால் பெரிய பாதிப்பு ஏற்படாது. மனதிலும் எப்போதும் குழப்பம் நிறைந்திருக்கும். அதனால் உங்களால் தெளிவாகச் சிந்திக்க முடியாது. முடிவு எடுப்பதில் தடுமாற்றம் ஏற்படும். சில சமயங்களில் நீங்கள் எடுக்கும் தவறான முடிவுகள் நல்ல முடிவுகளாகத் தோன்றும். அந்த முடிவுகளின்படி நடந்து கொண்டு சில இழப்புகளைத் தேடிக் கொள்வீர்கள். பரிகாரம்: மஹாவிஷ்ணு வழிபாடு நல்லது.

செப்டம்பர்


தொழில் வியாபாரத்தில் மந்தமான போக்கு காணப்பட்டாலும் ஓரளவு இலாபம் கிட்டும். உத்தியோகம் பார்ப்பவர்கள் மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாவார்கள். தொழிலாளர்கள் சம்பள உயர்வுக்காகப் போராட வேண்டியிருக்கும். குடும்பத்தில் நீங்கள் அனைவரையும் அனுசரித்துப் போக வேண்டும். அரவணைத்துச் செல்ல வேண்டும். பரிகாரம்: அம்மன் வழிபாடு நல்லது.

அக்டோபர்


உங்களுடைய பொருளாதார நிலை திருப்திகரமாக காணப்படும். கொடுக்கல் வாங்கல்களை ஒழுங்குபடுத்திக் கொள்வீர்கள். வீட்டுக்குத் தேவையான பொருட்கள் மரச்சாமான்கள் அலமாரி போன்றவற்றை வாங்குவீர்கள். காரியம் நடக்கிறதோ இல்லையோ மனதில் மட்டும் பெரியதாகத் திட்டம் போட்டுக்கொண்டே இருப்பீர்கள். பரிகாரம்: சூரிய வழிபாடு செய்து வரவும்.

நவம்பர்


இந்த மாதத்தில் உங்களால் உருப்படியாக எதையும் செய்ய முடியாது. அடிக்கடி உங்கள் மனநிலை மாறிக் கொண்டே இருப்பதே இதற்குக் காரணமாகும். உங்களுக்கு எல்லாமே குழப்பமாக இருக்கும். எதைச் செய்வது எதைச் செய்யாமல் இருப்பது என்று தடுமாறி நிற்பீர்கள். இந்த சமயத்தில் உங்களுக்கு யாரிடமிருந்தும் உதவி கிடைக்காது. பரிகாரம்: விஷ்ணு துர்க்கையை வழிபடவும்.

டிசம்பர்


இம்மாதத்தில் தொழில் வியாபாரத்தில் சற்று முன்னேற்றமான போக்கு காணப்படும். உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு அலுவலகத்தில் வேலைப்பளு குறையும். கலைஞர்களுக்கும் புதிய ஒப்பந்தங்களாலும் புதிய தொடர்புகளாலும் வருமானம் பெருகும். குடும்பத்தில் கணவன் மனைவிக்கிடையே நெருக்கமான உறவு காணப்படும். திருமணப் பேச்சு வார்த்தைகள் நடைபெறுமே தவிர எந்த முடிவும் ஏற்படாது. பரிகாரம்: லட்சுமி நாராயண பூஜை செய்யவும்.

0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India