2012 - ம் வருட ராசிபலன்


சஞ்சலங்களை விலக்கி, துணிவுடன் செயலாற்றும் குணமுடைய நீங்கள்! பிறர் சொல்லும் வார்த்தைகளைக் கண்டு மனம் குழப்பாமல் இருந்தால் உற்சாகமாய் வேலை செய்யலாம். புதனை தன் ராசி நாதனாகக் கொண்ட இவர்கள் அறிவுக் கூர்மையும், எதனையும் பகுத்தறியும் திறமையும் உடையவர்கள், எந்தச் சூழலிலும் தன் அறிவின் மேல் நம்பிக்கை வைத்து செயல்படுவதால் எளிதில் வெற்றி என்னும் இலக்கை அடைவார்கள். நடை, உடை, பாவனை ஆகியவற்றில் தனித்து விளங்கும் இவர்கள் விரைவில் தனக்கென்று ஒரு நட்பு வட்டத்தை ஏற்படுத்திக் கொள்வர். பெருந்தன்மை உடைய இவர்கள் உழைக்க அஞ்ச மாட்டார்கள். மிருகசீரிட நட்சத்திரக்காரர்களுக்கு வேதை(ஆகாதது) மீருகசீரிடம், சித்திரை, அவிட்டம் நட்சத்திரம் திருமணம் செய்ய தொழில் கூட்டு சேர்க்கவும் இந்த 3 நட்சத்திரங்கள் கூடாது (ஏக ரச்சு) மற்றவர்களுக்கு எல்லாம் 6 நட்சத்திரங்கள் ஆகாதவைகளாக வரும் போது உங்களுக்கு மட்டும் 3 நட்சத்திரங்கள் தான் ஆகாதவை என்பது சிறப்பு தானே! அதிர்ஷ்ட மலர் - செண்பகப்பூ. அதிர்ஷ்ட ரத்தினம் - (கல்) பவளம். அனுகூலத் தெய்வம் - சுப்பிரமணியர். அதிர்ஷ்ட நிறம் - சிவப்பு, செம்மை. அதிர்ஷ்ட எண் - 5. திருவாதிரை நட்சத்திரக்காரர்களுக்கு வேதை(ஆகாதது) திருவோணம் நட்சத்திரம் திருமணம் செய்ய, தொழில் கூட்டு சேர்க்கவும் பொருந்தாத நட்சத்திரங்கள் 6. அவைகள் திருவாதிரை, அஸ்தம், சுவாதி, திருவோணம், சதயம், ரோகிணி. அதிர்ஷ்ட மலர் - செண்பகப்பூ. அனுகூலத் தெய்வம் - பத்திரகாளி. அதிர்ஷ்டக் கல் - கோமேதகம். அதிர்ஷ்ட நிறம் - கருமை கலந்த மஞ்சள். அதிர்ஷ்ட எண் - 6. புனர்பூசம் நட்சத்திரக்காரர்களுக்கு வேதை(ஆகாதது) உத்திராடம் நட்சத்திரம். திருமணம் செய்ய, தொழில் கூட்டு சேர்க்கவும், உங்களுக்கு ஆகாத நட்சத்திரங்கள் 6. அவைகள் புனர் பூசம், கார்த்திகை, உத்திரம், உத்திராடம், விசாகம், பூரட்டாதி. அதிஷ்ட மலர் - முல்லை. அனுகூல தெய்வம் - பிரம்மா. அதிர்ஷ்ட ரத்தினம் (கல்) கனகபுஷ்பராகம். அதிர்ஷ்ட நிறம் மஞ்சள். அதிர்ஷ்ட எண் 7. மிதுன ராசிக்குரிய ஆதிக்கக் கிரகம்: மிதுனம். உங்களுடைய ஆதிக்கக் கிரகம்: புதன். அதிர்ஷ்ட மலர் - வெண்காந்தள். அதிர்ஷ்டக் கல் - வைரம். அதிர்ஷ்ட நிறம் - பச்சை. அதிர்ஷ்ட திசை - வடக்கு, அதிர்ஷ்ட எண் 5. நீங்கள் வழிபட வேண்டிய தெய்வம் - மகாவிஷ்ணு. பொதுப்பலன்: எதிலும் அறிவாற்றலைக் கொண்டு தனி முத்திரை பதிக்க விரும்பும் மிதுன ராசி நேயர்களே! 2012 புத்தாண்டு உங்களுக்கு எப்படி மலர்கிறது என்று பார்ப்போம்.


ஜனவரி


இம்மாதத்தில் உங்களுடைய பொருளாதார நிலையில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்படவில்லை என்றாலும் செலவுகளைச் சமாளிக்கும் அளவுக்கு வருமானம் வரும். நகை, நட்டு, வீட்டுக்குத் தேவையான பொருட்கள் போன்றவற்றையும் வாங்க முடியும். அது மட்டுமல்ல; வீடு, மனை, வாங்கவோ அல்லது சொந்தமாக வீடு கட்டவோகூட முடியும். இருக்கும் இடத்தை பழுது பார்த்து வசதி வாய்ப்புகளைப் பெருக்கியும் கொள்ளலாம். பரிகாரம்: சிவ வழிபாடு செய்வது நல்லது.

பிப்ரவரி


இம்மாதத்தில் வருமானத்திற்கு ஆதாரமான உத்தியோகம், தொழில், வியாபாரம் போன்றவற்றில் இருந்து வந்த கடுமையான உழைப்பு சற்றுக் குறையும். அங்கேயும் இங்கேயுமாக அலை மோதித்திரிதல், அலைந்து அலைந்து பயனற்றுப் போதல், எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்காமல் போதல், நெருங்கிப் பழகுபவர்களே நம்பிக்கை துரோகம் செய்தல் போன்றவை இனி நடைபெறாது. பல அவசியமான திருப்பங்களுக்கு அடைப்பாக இருந்த பல வழிகள் திறந்து கொள்ளும். கடுமையான உபத்திரவங்களும் காலத் தாமதங்களும் குறையும். பரிகாரம்: அனுமனை வழிபாடு செய்து வரவும்.

மார்ச்


இம்மாதத்தில் உங்களுடைய ஆரோக்கியத்தில் அபிவிருத்தி ஏற்படும். அலுப்பு, சலிப்பு, வசதி, அசௌகரியங்கள் போன்றவை நீங்கும். வேளா வேளைக்குச் சாப்பிட முடியும். நோய்கள் வந்தாலும் உடனுக்குடன் குணமாகி விடும். பரிகாரம்: சிவனுக்கு தீபம் ஏற்றி வழிபடவும்.

ஏப்ரல்


இம்மாதத்தில் கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்படலாம். கணவன் அல்லது மனைவியின் உடல் நலம் பாதிக்கப்படும். வேலை காரணமாகச் சில மாதங்கள் பிரிந்திருக்க நேரிடலாம். அலுப்பு, சலிப்பு, நெருக்கமின்மை போன்றவையும் ஏற்படலாம். திருமண வயதில் உள்ள ஆண்கள் அல்லது பெண்களுக்குத் திருமணம் நிச்சயமாவதில் தாமதம் ஏற்படலாம். பரிகாரம்: அனுமனை வழிபாடு செய்து வரவும்
.
மே


இம்மாதத்தில் குடும்பத்தைப் பிரிந்து வாழ நேரிடும் என்றும், அடுத்தடுத்து ஏற்படும் பிரச்சினைகளால் மன நிம்மதியை இழக்க நேரிடும் என்றும் பலன் சொல்வதுண்டு. அதன்படி ஒருவர் குடும்பத்தைப் பிரிந்து வாழ நேரிட்டாலும் தாறுமாறாகச் செலவுகள் ஏற்பட்டாலும் வருமானம் மிகவும் சிறப்பாக இருக்கும். நேர்மையாகவும் உழைத்துப் பெரும் புகழ் பெறுவார்கள். பலராலும் பாராட்டப்படுவார்கள். பரிகாரம்: சிவன் வழிபாடு செய்து வரவும்.

ஜூன்


இம்மாதத்தில் எந்த வெற்றியையும் எளிதாகப் பெற்றுவிட முடியாது. சிறு வெற்றியாக இருந்தாலும் போராடித்தான் பெற வேண்டியிருக்கும். அதே போல் உங்கள் கைக்கு பணம் வருவதும் எளிதாக வந்து விடாது. தடைகள், தாமதங்கள் போன்றவற்றைத் தாண்டியே உங்கள் கைக்கு வந்து சேர வேண்டும். அதற்குள் சோர்ந்து போய் விடுவீர்கள். பரிகாரம்: விஷ்ணு வழிபாடு செய்து வரவும்.

ஜூலை


இம்மாதத்தில் தொழில், வியாபாரத்தில் முன்னேற்றமான போக்கு காணப்பட்டாலும் எதிர்பார்க்கும் லாபம் கிட்டாது. உத்தியோகம் பார்ப்பவர்கள் கடினமாக உழைத்தாலும் மேலதிகாரியிடம் நல்ல பெயர் வாங்க முடியாது. கலைஞர்களுக்கு புதிய தொடர்புகளால் வருமானம் பெருகும். ஆனால் அதைவிட அதிகமாகச் செலவு ஏற்படும். பரிகாரம்: பௌர்ணமி விரதம் இருந்து இஷ்ட தெய்வ வழிபாடு செய்யவும்.

ஆகஸ்ட்


இம்மாதத்தில் சுக சௌகரிய வசதிகளை அபிவிருத்தி செய்து கொள்ள வருமான வரவுகள் ஒத்துழைக்கும். வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதில் சிரமம் இராது. பரிகாரம்: லஷ்மி நாராயண வழிபாடு செய்து வரவும்.

செப்டம்பர்


இம்மாதத்தில் பொதுவாக இப்போது நீங்கள் வேகம் குறைந்தவர்களாக காணப்படுவீர்கள். ஒரு காரியத்தை எடுத்துக் கொண்டால் அதை உடனே செய்து முடிக்க வேண்டும் என்று தோன்றாது. சாவகாசமாகச் செய்து கொள்ளலாம் என்று நினைப்பீர்கள். இந்த சோம்பேறித்தனத்தால் சில வெற்றிகளைக் கை நழுவ விடுவீர்கள். பரிகாரம்: மஹாவிஷ்ணு வழிபாடு செய்து வரவும்.

அக்டோபர்


இம்மாதத்தில் தொழில், வியாபாரத்தில் புதிய நெருக்கடிகள் தோன்றும். உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு அலுவலகத்தில் அதிருப்தியான சூழ்நிலை நிலவும். மாணவ, மாணவிகள் வேடிக்கை விளையாட்டுக்களை நிறுத்தி விட்டுப் படிப்பில் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் உண்டாகும். குடும்பத்தில் கணவனும் மனைவியும் இணக்கமாக நடந்து கொள்வார்கள். பிள்ளைகளின் படிப்பு வகையில் சற்று அதிகமாகச் செலவாகும். பரிகாரம்: அம்மன் வழிபாடு செய்து வரவும்.

நவம்பர்


இந்த மாதத்தில் பணப்பிரச்சினைகள் உங்களைப் பாடாய்ப்படுத்தும். உங்களுக்கு வரவேண்டிய பணம் கைக்கு வந்து விட்டால் எல்லாச் செலவுகளையும் எளிதாகச் சமாளித்து விடுவீர்கள். ஆனால் வரவேண்டிய பணம் உரிய நேரத்தில் கைக்கு வந்து சேராது. அதுதான் பிரச்சினை. செலவுகளைச் சமாளிக்க முடியாமல் அல்லாடிப் போவீர்கள். பரிகாரம்: அம்மனுக்கு தீபம் ஏற்றி வழிபாடு செய்யுங்கள்.

டிசம்பர்


இம்மாதத்தில் தொழில், வியாபாரத்தில் புது நெருக்கடிகள் தோன்றினாலும் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும். உத்தியோகம் பார்ப்பவர்கள் அலுவலகத்தில் தவறுகளோ அல்லது குற்றங்களோ நேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மாணவ, மாணவிகள் வேடிக்கை விளையாட்டுக்களைக் குறைத்துக் கொண்டு படிப்பில் கவனம் செலுத்துவது நல்லது. பரிகாரம்: துர்க்கை வழிபாடு நல்லது.

0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India